Friday, 27 October 2017

திருமணமான பெண்கள் எத்தனை மெட்டி அணியலாம்? - ஜோதிடர் பதில்கள்! ஜோதிடர் பதில்கள் !

திருமணமான பெண்கள் எத்தனை மெட்டி அணியலாம்? - ஜோதிடர் பதில்கள்!


1. பெண்கள் மெட்டி எத்தனை அணியவேண்டும்?

🌟 மெட்டியை கால்களில் உள்ள பெருவிரலுக்கு அடுத்த இரு விரல்களிலும் அணியலாம்.

🌟 திருமணமான பெண்கள் மெட்டியை அணிவதால் கருப்பையில் உள்ள பிரச்சனைகள் தீரும்.

🌟 மெட்டி அணிவதால் விரைவாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.

2. இருசக்கர வாகனத்தில் பன்றி மோதிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

🌟 வாகனத்தை சுத்தம் செய்து விநாயகர் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வரவும்.

🌟 பன்றி என்பது வராஹி பெருமானின் அவதாரம். ஆகவே வராஹி பெருமானின் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வரவும்.

🌟 வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும்.

3. குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்றால் என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?

🌟 கந்த சஷ்டி விரதம் இருந்து 'ஓம் சரவணபவ" என்னும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🌟 சஷ்டியில் விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🌟 ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண யாகம் செய்வதால் குழந்தை பாக்கியம் பெறலாம்.

🌟 வியாழக்கிழமை அன்று புத்திர காரகரான குரு தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி, முல்லை மலரிட்டு கற்கண்டு சாதம் படைத்து வரவும்.

4. கணவன் மனைவி ஒற்றுமைக்கு என்ன செய்ய வேண்டும்?


🌟 கணவன் மனைவி ஒற்றுமைக்கு உதாரணமாக திகழும் அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வருவதன் மூலம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

🌟 இல்லங்களில் 'அடங்கல் விடைமேல் அமர்ந்த ஐயனும் அம்பாளும்" உள்ள படத்தை வைத்து வணங்க வேண்டும்.

🌟 திருச்சியில் உள்ள திருவானைக்காவல் அம்பிகையையும், இறைவனையும் வணங்கி வருவதால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும்.

5. புதிய பைக் வாங்க சிறந்த நாள் எது என்று கூறுங்கள்?

🌟 வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் வாகனம் வாங்குவது வாகன விருத்தியை கொடுக்கும்.

🌟 அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் வாகனம் வாங்கலாம்.

🌟 சஷ்டி, பௌர்ணமி, ஏகாதசி போன்ற திதிகளில் வாகனத்தை வாங்குவது சிறப்பு.