Saturday, 28 October 2017

கோவிலுக்கு எதிரே வீடு அமையலாமா? - வாஸ்து நிபுணரின் பதில்கள்!

கோவிலுக்கு எதிரே வீடு அமையலாமா? - வாஸ்து நிபுணரின் பதில்கள்!
வாஸ்து கேள்வி பதில்கள் !



1. கோவிலுக்கு எதிரே வீடு அமையலாமா?

🏠 கோவிலுக்கு எதிரில் வீடு கட்டி கொள்ளலாம். கோவிலுக்கு வரக்கூடிய சாலை அமைப்பு நாம் கட்டக்கூடிய வீட்டிற்கு உச்சத்தில் வரும்படியானதாக இருப்பது சிறப்பாகும்.

2. தோட்டத்தின் சனி மூலையில் வீடு அமையலாமா?

🏠 ஏக்கர் கணக்கில் விவசாய நிலம் இருக்குமானால் சனி மூலைப்பகுதியில் வீடு அமைத்துக் கொள்ளலாம்.

3. இரண்டு வீட்டிற்கு ஒரே பொது சுவர் வைத்து கட்டலாமா? குறிப்பாக அண்ணன், தம்பி வீடு ஒட்டி அமையலாமா?

🏠 அண்ணன், தம்பி வீடு கட்டும்போது தனித்தனி வீடாக கட்ட வேண்டும். தனித்தனி காம்பவுண்ட் போட்டு கட்டுவது மேலும் சிறப்பைத் தரும். செலவை மிச்சம் செய்வதற்காக ஒரே காம்பவுண்ட் போட்டு கட்டும்போது ஒருவர் மிக உயர்ந்த நிலைக்கு செல்வார். மற்றொருவர் மிக மோசமான நிலைக்கு சென்று துன்பத்தில் மாட்டிக் கொள்வார்.

4. எப்போதெல்லாம் வாஸ்து ஆலோசனைகள் பெறுவது நல்லது?


🏠 புது வீடு கட்டும்போதும், புது இடம் வாங்கும்போதும் மற்றும் பழைய இடங்களை விற்கும்போதும், வாஸ்து நிபுணரின் ஆலோசனையை கேட்டு செய்வது மேலும் சிறப்பைத் தரும்.

5. படிப்பதற்கு தனி அறை அமைக்கலாமா?

🏠 படிப்பதற்கு என்று தனி அறை மிக அவசியம். அதுவும் வடகிழக்கு பகுதியில் வருவது மிக மிக சிறப்பாகும்.

6. இடம், திசைக்கு கோணமாக இருந்தால் சரியா? தவறா?

🏠 இடம், திசைக்காட்டிக்கு கோணமாக இருப்பது தவறில்லை. அந்த இடத்தில் கட்டக்கூடிய பில்டிங்கிற்கு ஜன்னல், கதவுகள் அனைத்தையும் மிக மிக உச்சமான பகுதியில் மட்டுமே வைக்க வேண்டும்.