குரு நீச்சம் பெற்றால் பரிகாரம் என்ன? - ஜோதிடர் பதில்கள் !
1. குரு நீச்சம் பெற்றால், அதற்கான பரிகாரங்கள் என்ன?
வியாழக்கிழமை அன்று ஆலங்குடி சென்று குரு பகவானை தரிசித்து 24 தீபம் ஏற்றி, 24 முறை கோவிலை வலம் வர வேண்டும்.
திருச்செந்தூர் சென்று சமுத்திர ஸ்நானம் செய்து சண்முகப் பெருமானை வழிபட்டு வரவும்.
கொண்டைக் கடலையை குரு பகவானிற்கு அர்ப்பணம் செய்து, அதை ஏழை மக்களுக்கு கொடுக்கவும்.
வீட்டின் பு+ஜை அறையில் திருச்செந்தூர் முருகன் அல்லது கருட வாகனத்தின் மேல் உள்ள மகாவிஷ்ணுவின் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.
2. கோவில் விளக்கில் பெண்கள் தலைமுடி எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
பெண்கள் மகாலட்சுமியின் அம்சம். எனவே, அவர்களின் தலைமுடி கோவில் விளக்கில்
எரிவது குடும்பத்தில் ஏற்படப் போகும் பொருளாதார வீழ்ச்சியை குறிக்கிறது.
ஆகவே, பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.
மேலும், வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபாடு
செய்வது, குடும்பத்தில் ஏற்படப் போகும் பொருளாதார வீழ்ச்சியின் வீரியத்தைக்
குறைக்கும்.
3. பெண்களுக்கு இடது விரலில் மச்சம் இருந்தால் நன்மையா?
பெண்களுக்கு கையில் மச்சம் எங்கு இருந்தாலும், அவர்களுக்கு அது நல்லதையே கொடுக்கும்.
எடுத்த காரியங்களை முடிக்கக் கூடியவராகவும், நற்குணம் கொண்டவராகவும் இருப்பர்.
பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பர்.
4. குரு சண்டாள யோகம் என்றால் என்ன?
ராசிக்கட்டத்தில் ஏதேனும் ஒரு ராசியில் குருவுடன் ராகு கேது, சனி மற்றும் செவ்வாய் இணைவது குரு சண்டாள யோகம் ஆகும்.
பலன் :
ஜாதகர் மதப்பற்று இல்லாதவராகவும், கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் இருப்பார்.
5. காக்கை முட்டை இட்டு குஞ்சுகள் பொரிப்பது போல் கனவு வந்தால் நன்மையா?
இது குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் இணைவார்கள் என்பதை குறிக்கிறது.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கப்போகும் என்பதனை சுட்டிக் காட்டுகிறது.
திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பதை குறிக்கிறது.
1. குரு நீச்சம் பெற்றால், அதற்கான பரிகாரங்கள் என்ன?
2. கோவில் விளக்கில் பெண்கள் தலைமுடி எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
3. பெண்களுக்கு இடது விரலில் மச்சம் இருந்தால் நன்மையா?
4. குரு சண்டாள யோகம் என்றால் என்ன?
பலன் :
5. காக்கை முட்டை இட்டு குஞ்சுகள் பொரிப்பது போல் கனவு வந்தால் நன்மையா?