Saturday, 11 November 2017

பிறந்த நட்சத்திரத்தன்று மொட்டை போடலாமா? - ஜோதிடர் பதில்கள் ! ஜோதிடர் பதில்கள் !

பிறந்த நட்சத்திரத்தன்று மொட்டை போடலாமா? - ஜோதிடர் பதில்கள் !
ஜோதிடர் பதில்கள் !

1. பிறந்த நட்சத்திரத்தன்று மொட்டை போடலாமா?
⭐ முதல் முடி இறக்குவதற்கு மட்டுமே நாள், நட்சத்திரம் மற்றும் திதியை பார்க்க வேண்டும்.

⭐ மற்றவற்றிற்கு பார்க்க வேண்டியது இல்லை. மேலும் ஆலய வழிபாட்டிற்கு மட்டுமே பிறந்த நட்சத்திரம் சிறப்பானது. முடி இறக்குவதற்கு சிறந்தது அல்ல.

2. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும்?
⭐ சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.

⭐ சரஸ்வதி தேவியின் குருவான ஹயக்கீரிவரை வியாழக்கிழமைதோறும் நெய்தீபம் ஏற்றி, ஏலக்காய் மாலை சாற்றி வழிபாடு செய்வது கல்வியில் மேன்மையை தரும். 

⭐ வருடம் ஒரு முறையாவது திருவந்திப்புரம் சென்று வருவது கல்வியில் முன்னேற்றம் தரும். 

⭐ தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் பொட்டுக்கடலை, சர்க்கரை கொண்டு நிவேதினம் செய்வது கல்வியில் முன்னேற்றம் தரும்.

3. பாம்பு வீட்டிற்குள் வந்தால் என்ன செய்வது?
⭐ பாம்பு என்பது தெய்வம்சம் பொருந்திய உத்தமமான ஜீவன் ஆகும். ஆகவே பாம்பை அடிக்கக் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது.

⭐ இருப்பினும் நாகன் என்ற இனமே தெய்வமாக கருதப்படுகிறது. மற்ற பாம்பு வகைகளை அடிக்கலாம். பொதுவாக பாம்பு ஒரு விஷ உயிரினம் ஆகும்.

⭐ பாம்பு வீட்டிற்குள் புகுந்தால் பயம் ஏற்படும். பாம்பை விரட்டி விடலாம் அல்லது பாம்பை கொன்று விடலாம். 

⭐ அடித்த பாம்பை அப்படியே விடாமல் எந்த வகை பாம்பாக இருந்தாலும் பால், நெய் ஊற்றி நெருப்பிட்டு எரித்து விடுவது நல்லது.

⭐ மேலும் அதன் முள்ளை அப்புறப்படுத்தி விட வேண்டும். இறந்த பாம்பின் முள் காலில் தைத்தாலும் விஷமே.


4. ருத்ராட்சம் அணிந்து அசைவம் சாப்பிடலாமா?

⭐ ருத்ராட்சம் அணிந்து அசைவம் சாப்பிட்டால் தோஷம் ஏற்படும். ருத்ராட்சம் அணிவதால் மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

⭐ ருத்ராட்சம் சிவனின் அம்சம் ஆகும். ஆகவே ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவத்தை சாப்பிடக்கூடாது.

5. இடது காதின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

⭐ அனைத்து வசதிகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வர். சொந்த முயற்சியால் முயன்று பொருள் சேர்க்கையை அடைவார்கள்.

⭐ பூர்வீகச் சொத்துகள் இருக்கப் பெற்றவர்கள். கணவன் அல்லது மனைவி ஆரோக்கியத்துடன் வாழ்வர்.

6. மூல நட்சத்திரத்தின் குணநலன்கள் யாவை?

⭐ மற்றவர்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்.

⭐ உணவுகளை ருசித்து சாப்பிடக்கூடியவர்.

⭐ சுறுசுறுப்பாக இருக்கக் கூடியவர்கள்.

⭐ செய்யும் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கக் கூடியவர்கள்.