Friday, 3 November 2017

நீங்கள் பிறந்த லக்னத்திற்கான பலன்கள் !

நீங்கள் பிறந்த லக்னத்திற்கான பலன்கள் !
லக்ன பலன்கள் !

மேஷ லக்னம் :

மேஷ லக்னத்தில் பிறந்த ஜாதகர் வலிமையும் வல்லமையும் உள்ளவராகத் திகழ்வர். எந்த விஷயத்திலும் தலைமை வகிப்பவர். எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவராக காட்சி அளிப்பர்.

ரிஷப லக்னம் :

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மதிப்பு, செல்வாக்கு, வசீகர சக்தி, புகழ், பெருமை போன்றவை கிட்டும். புத்திர பாக்கியம் தாமதமாக கிடைக்கும். சிறுவயதில் கஷ்டப்பட்டாலும், பிற்காலத்தில் பெருமையாக வாழ்வர்.

மிதுன லக்னம் :

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் தந்திரம் மிக்கவர்கள். சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் இருக்கும். இவர்கள் துடிப்பான வார்த்தையை பேசுபவர்கள். இவர்கள் நன்கு சிந்தித்து செயல்படக்கூடிய தன்மை உடையவர்கள்.

கடக லக்னம் :

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் சந்தோஷமாக வாழும் பாக்கியம் பெற்றவர்கள். வீடு, வாசல், பு+மி போன்ற யோகம் இவர்களை நாடி வரும். தான தர்மங்கள் செய்வதில் வல்லமை உடையவர்கள்.

சிம்ம லக்னம் :


இவர்கள் உறுதியான உடல் அமைப்பும், கம்பீரமாக பேசும் ஆற்றலும் கொண்டவர்கள். அதிக முன்கோபம் உள்ளவர்கள். எதிலும் துணிச்சலுடன் இறங்கி செயலாற்றுவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் பிரியம் உள்ளவர்கள்.

கன்னி லக்னம் :

தயாள சிந்தனை, நல்ல ஒழுக்கம், தொழில் ரீதியான ஏற்றம், மற்றவர்களிடம் அன்புடன் பழகும் சுபாவம் போன்றவை பெற்றவர்களாக இருப்பர். உண்மையானவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும் திகழ்வர். திட்டமிட்டு காரியங்களை முடிக்கும் செயல் திறன் கொண்டவர்களாக இருப்பர்.

துலாம் லக்னம் :

இந்த லக்னக்காரர்கள் நல்ல பொன், பொருள் சேர்க்கை, மற்றவர்களிடம் இனிமையாக பேசும் குணசுபாவம் இவர்களிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும். மற்றவர்களின் மீது இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பர்.

விருச்சக லக்னம் :

மிகுந்த அறிவுக்கூர்மை உள்ளவர்கள். மனதில் பல்வேறு திட்டங்களுடன் செயல்படுவர். மற்றவர்களை இனிமையாக பேசி கவரும் தன்மை கொண்டவர்கள். நண்பர்களிடம் மிகவும் பிரியமுள்ளவர்கள்.

தனுசு லக்னம் :

இவர்கள் உண்மையை மட்டுமே பேசக் கூடியவர்கள். மற்றவர்களால் நேசிக்கக்கூடியவர்கள். எப்போதும் துடிப்புடன் ஏதேனும் பணியில் இருந்து கொண்டே இருப்பார்கள்.

மகர லக்னம் :


அதிக நம்பிக்கையும் பக்தியும் உள்ளவர்கள். எப்போதும் சுபமான பேச்சுகளில் பிரியம் கொண்டவர்கள். வெளியு+ர் பயணம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள்.

கும்ப லக்னம் :

குடும்பத்தின் மீது பற்றும், பாசமும் மிக்கவர்கள். பெண்களால் அதிகம் நேசிக்கப்படுபவர்கள். இவர்களிடம் தற்புகழ்ச்சி அதிகம் காணப்படும். அதிக செல்வ செழிப்புடன் வாழும் யோகம் உடையவர்களாக இருப்பர்.

மீன லக்னம் :

எதிலும் தீர்க்கமாக சிந்தித்து செயலாற்றக்கூடியவர்கள். பெரியோர்களிடம் பக்தியும் விசுவாசமும் கொண்டவர்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பர். அதிக அளவில் செலவுகள் செய்வர்.