Friday, 3 November 2017

வாஸ்து - வடகிழக்கு பகுதியின் நன்மைகள் !

வடகிழக்கு :

இந்த வடகிழக்கு பகுதி என்பது வடக்கு மற்றும் கிழக்கு திசை இரண்டும் சேருமிடமாகும்.

சரியான அமைப்புகள் :

1. வடகிழக்கு தாழ்வாக இருப்பது.

2. வடகிழக்கில் நீர்நிலைகள் இருப்பது.

3. வடகிழக்கு சதுரம், செவ்வகமாக இருப்பது.

4. வடகிழக்கு திறந்த வெளியில் இருப்பது.

5. வடகிழக்கில் 5 அல்லது 6 அடியில் மட்டுமே போர்டிகோ அமைப்பு இருப்பது.

6. வடகிழக்கில் முக்கிய கேட் அல்லது முக்கிய வாசல் இருப்பது.

7. வடகிழக்கு வீட்டை விட, ரோடு அமைப்பு தாழ்வாக இருப்பது.

8. வடகிழக்கு ரோடுகுத்து, தெருக்குத்து, ரோடு பார்வை, தெருப்பார்வை வருவது சிறப்பு.

9. வடகிழக்கில் காம்பவுண்ட் அமைப்புகள்.

10. வடகிழக்கின் இருபுறமும் ஜன்னல் வருவது சிறப்பானதாகும்.

பயன்கள் :

1. முழு உழைப்பு இருந்தாலும் பலன் பாதிதான் கிடைக்கும்.

2. நீண்ட ஆயுள் நிறை செல்வத்துடன் வாழ்வார்கள்.

3. பாசிட்டீவான பேச்சாளராக இருப்பார்கள்.

4. நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

5. நல்ல புத்திக்கூர்மையுடன் இருப்பார்கள்.

6. நல்ல தௌpவான மனநிலையில் இருப்பார்கள்.

7. செல்வந்தர்களாக இருப்பார்கள்.

8. கஷ்டங்களை ஒருபோதும் காட்டிக் கொள்ளாத நபர்களாக அந்த வீட்டில் வசிப்பவர்கள் இருப்பார்கள்.

9. வாழ்வை ரசித்து வாழ்பவர்களாக இருப்பார்கள்.