Sunday, 12 November 2017

அமாவாசை நாளில் என்ன செய்யலாம்? - ஜோதிடர் பதில்கள் !

அமாவாசை நாளில் என்ன செய்யலாம்? - ஜோதிடர் பதில்கள் !


1. அமாவாசை அன்று எந்த காரியங்களை செய்யலாம்?

🌻 அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்யலாம்.

🌻 அமாவாசை அன்று பித்ருக்களை வழிபட உகந்த நாள்.

🌻 சுப காரியங்களுக்கு அமாவாசை ஏற்ற நாள் அல்ல.

2. சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?


🌻 தீட்சை பெற்றவர்கள் மட்டுமே சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வணங்க வேண்டும்.

🌻 மற்றவர்கள் ஒரு அடிக்கு கீழே உள்ள சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வணங்கலாம்.

🌻 சிலைகளை வைத்து வணங்கும்போது தினமும் நைவேத்தியம் படைக்க வேண்டும்.

3. ஆயில்யம் நட்சத்திரத்தின் நன்மைகள்?

🌻 ஆயில்ய நட்சத்திரம் உடையவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் வாய்ப்பை கொண்டவர்கள்.

🌻 இவர்கள் பொறுமையாக இருப்பார்கள், சுகபோகங்களில் ஆசையுடையவர்கள்.

4. வீட்டில் வளர்க்கும் நாயை மற்றவர்களுக்கு தரலாமா?


🌻 வீட்டில் வளர்க்கும் நாயை மற்றவர்களுக்கு தரலாம்.

🌻 நாயை வாங்குபவரை பற்றி கொடுப்பவர் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் வாங்கியவர் அந்த நாயை கொடுமைப்படுத்தினால், அந்த பாவம் நாயை கொடுத்தவரையே சாரும்.

🌻 நாய் என்ற ஜீவன் கால பைரவரின் வாகனமாகும்.

5. கோவில் படிகட்டில் இருந்து கீழே விழுவது போன்று கனவு கண்டால் என்ன பலன்?

🌻 கோவில் படிகட்டில் இருந்து கீழே விழுவது போல் கனவு வருவது, இதுவரை நீங்கள் யாரை நம்பினீர்களோ அவர்கள் உங்களை ஏமாற்ற போகிறார்கள் என்பதை குறிப்பதாகும்.

🌻 எனவே அனைவரிடமும் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

🌻 நண்பர்களிடத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.