Saturday, 11 November 2017

கிரக சேர்க்கையால் கிடைக்கும் பலன்கள் !

கிரக சேர்க்கையால் கிடைக்கும் பலன்கள் !

கிரக சேர;க்கையால் கிடைக்கும் பலன்கள் !



🌠 மேஷ லக்னத்திற்கு 3-க்குரியவர் புதனாக இருப்பதால் கம்ப்யு+ட்டர், வானசாஸ்திரம், எண் கணிதம், பத்திரிக்கை, கெமிக்கல் ஆகிய துறைகளில் ஏதாவது ஒன்றில் பிரகாசிப்பர்.

🌠 ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செல்வச் சீமானாக வாழும் அமைப்பு இருக்கிறது. நல்ல குணமும், அழகான உடல் அமைப்பும் அமைந்த மனைவியை அடைந்து சந்தோச வாழ்க்கை அனுபவிப்பர். எப்போதும் கூடுமானவரை மன நிம்மதியுடன் வாழ்வார். கணக்கில் வல்லவராக இருப்பார். ரிஷப லக்னத்திற்கு சு+ரியனும், சனியும் நல்லவர்கள். 

🌠 மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் காதலுக்கு முக்கியத்துவம் தருவார்கள். இவர்களுக்கு 7,11க்குடைய குரு - செவ்வாய் சேர்ந்து சுக்ரனை பார்த்தால் காதல் வெற்றி உண்டாகும்.

🌠 கடக லக்னத்திற்கு செவ்வாயும், குருவும் இணைந்து 5ல் இருப்பின் அல்லது செவ்வாயும், சுக்கிரனும் இணைந்து 11ல் இருந்தாலும், 9ல் இருந்தாலும் செல்வம் சேரும்.

🌠 சிம்ம லக்னமாகி 7க்குடைய சனி, சு+ரியனுடன் சேர்ந்து 10-ம் பாவத்தில் நின்றாலும் அல்லது 11ம் பாவத்தில் சுக்கிரன், செவ்வாய், புதன் இணைந்தாலும் இவருக்கு இருதாரம்.

🌠 துலாம் லக்னத்திற்கு புதனும், சந்திரனும் கூடி சு+ரியன் சம்பந்தமும் பெற்றால் ஜாதகருக்கு அரசுத்துறையில் பெரிய பதவி கிடைக்கும்.

🌠 கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு பாதகாதிபதி ஆகிறார். இவர் 3,6,11ல் நின்றாலும், ஜாதகருக்கு தனவரவு குறையின்றி தருகிறார்.

🌠 விருச்சக லக்னத்திற்கு பத்தாம் வீடாகிய சிம்மத்தில் சந்திரன் இருக்க சு+ரியன் லக்ன கேந்திரம் பெற்று விருச்சகத்தில் இருந்தால் ஜாதகருக்கு மந்திரி பதவி கிடைக்கும்.

🌠 தனுசு லக்னத்திற்கு 4,10 இராகு, கேது அமர்ந்து இருப்பின் எதை விரும்பினாலும் அதை அடைய முடியும். ஆடம்பரமான வாழ்விலும் நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வெற்றி அடைய முடியும். இவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகமிருக்கும்.

🌠 மகர லக்னத்திற்கு 5ம் இடத்தில் சனி வீற்றிருந்து, மகரமே ராசியானாலும் என்னதான் கல்வி கற்றாலும் திருமணத்திற்கு பிறகு கிராமத்தில் வசிக்கும் நிலை ஏற்படும்.

🌠 கும்ப லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு இரண்டாமிடத்தில் குருவும், சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் கோச்சாரப்படி குரு மீனத்தில் வரும் சமயம் சுக்ர திசை நடப்பில் இருந்தால் வாரிசு இல்லாத சொத்துக்கு வாரிசாக்கி கோடீஸ்வரன் ஆகும் யோகம் ஏற்படும்.

🌠 மீன லக்னத்திற்கு அதிபதியான செவ்வாய், புதன் சுக்கிரன் அமர்ந்து இருப்பின் எலக்ட்ரிக்கல், கம்ப்யு+ட்டர் துறையில் நிறைய சம்பாதிக்க முடியும்.