நற்பலன்களைத் தரும் வார தீப பூஜை !
வாரத்தில் ஒவ்வொரு கிழமையில் தீபம் ஏற்றி வழிபட சில கஷ்டங்கள் நம்மைவிட்டு அகலும். எந்த கிழமையில் எப்படி தீபமிட்டு வழிபட்டால் என்ன பலன் என்று பார்ப்போம்.
வாரத்தில் ஒவ்வொரு கிழமையில் தீபம் ஏற்றி வழிபட சில கஷ்டங்கள் நம்மைவிட்டு அகலும். எந்த கிழமையில் எப்படி தீபமிட்டு வழிபட்டால் என்ன பலன் என்று பார்ப்போம்.
ஞாயிறு :
ஞாயிற்றுக்கிழமை ஐயப்பனுக்கு நு}று தீபங்களை ஏற்றுதல் மிகவும்
விஷேசமாகும். தீபங்களை தாமரைப் பு+ வடிவில் ஏற்றுவது மிகவும்
சிறப்புடையதாகும். அதாவது தாமரைப்பு+ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக
வைத்து ஏற்றுதல் வேண்டும். ஞாயிற்றுக்கிழமை செய்யப்படும் இந்த தீப
வழிபாடுகளுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. இதுபோன்று
தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு
சந்தர்ப்பங்கள் உண்டு.
திங்கள் :
திங்கட்கிழமை அன்று இலுப்பை எண்ணெய் கொண்டு 56 தீபங்கள்
ஏற்றுவது விஷசமாகும். இந்த தீபங்களை அன்னபட்சி வடிவத்தில் வரிசையாய் ஏற்றி
வழிபடுதல் வேண்டும். அன்னப்பட்சிகள் போன்று அரிசி மாவு கோலம் வரைந்து
அவற்றின் மேல் இந்த தீபத்தை ஏற்றுவது சிறப்புமிக்கதாகும். மிகவும்
கஷ்டப்படுகின்றவர்களுக்கு மனச் சாந்தியைத் தரும் வழிபாடாக இது அமையும்.
செவ்வாய் :
செவ்வாய்க்கிழமைகளில் அரிசி மாவுக் கோலம் போட்டு, அதில் தீபம்
ஏற்றுதல் வேண்டும். அரிசி மாவில் இரட்டைக்கிளி உருவம் வரைந்து, அதன் மேல்
54 தீபங்களை உபயோகிப்பது மிகவும் சிறப்புடையதாகும். இந்த தீப வழிபாட்டால்
கணவன், மனைவியர் இடையே உறவு மேம்படும்.
புதன் :
புதன்கிழமை அன்று 23 தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில்
இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம்.
நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்தபுத்தி
அகலும்.
வியாழன் :
வியாழக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய் கொண்டு 57 தீபங்கள்
ஏற்றி, அரிசி மாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி
இத்தீபங்களை வைத்து வழிபடுதல் வேண்டும். இந்த தீப வழிபாடு காரணமாக பகைமை
கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்கள்.
வெள்ளிக்கிழமை :
வெள்ளிக்கிழமைகளில் 60 தீபங்கள் ஏற்றுதல் விஷேசம். மத்தால்
கடைந்து எடுத்த வெண்ணெயில் நெய்காய்ச்சி தீபமேற்றுதல் மிகவும் விஷேசம்.
மூன்று உள் வட்டமாக சுற்றி தீபமேற்றுவது சிறப்பு. இவ்வாறு வழிபடுவதால்
இல்லத்தில் அனாவசிய செலவுகள் குறையும்.
சனிக்கிழமை :
சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் கொண்டு 80 விளக்குகள் அல்லது
மொத்தத்தில் 80 தீப முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுவது விஷேசமாக
கருதப்படுகிறது. இந்த தீபத்தில் பித்ரு சாபங்கள் நீங்கும்.