ஆயுள் முழுவதும் சொத்து, சுகம் வாகன வண்டியோடு இருக்கும் ஜாதகம் எது?
இத்தகைய ஜாதக அமைப்போடு அரிதாகத் தான் சிலர் பிறப்பார்கள் என்று நாம் நம்பினால் அது தவறு. சொத்து சுகம், வண்டி வாகனம் என்பது மனிதனுக்கு சமுதாயத்தில் கௌரவத்தை தரக் கூடியது.
ஜாதகத்தில் சந்திரனுக்கு 1, 4, 7 மற்றும் 10ஆம் இடத்தில் குரு அமையப்
பெற்றால், இதை கஜகேசரி யோகம் அல்லது குரு சந்திர யோகம் என்பார்கள்.
ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றும், கஜகேசரி யோகம் அமைந்து இருந்தாலும், அவன்
பிறப்பில் இருந்து சாகும் வரை மேற்குறிப்பிட்ட சொத்துக்களோடு வாழ்வான்.
இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் கூட்டத்தில் முதன்மையானவனாகத் திகழ்வார்கள்.
எப்படிப்பட்ட இடர்பாட்டிலும் இருந்து தப்பித்து விடுவார்கள்.
மேலும் லக்னத்திற்கு 10ம் இடத்தில் சுபக்கிரகம் முழுமையான சுபத்தன்மையோடோ
ஒன்றுக்கு மேற்பட்ட சுபக் கிரகங்களால் பார்க்கப்பட்டோ இருந்தால் ஆயுள்
வரையில் சொத்து சுகத்திற்குக் குறைவு ஏற்படாது. ஆனால் அவன் கடன்காரனாக
இருக்கமாட்டான் என்று சொல்ல முடியாது.
ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் அழிந்து போக இத்தகைய பொருட்கள் தான்
காரணம். தங்கள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகிறார்களே தவிர
ஆயுள் முழுவதும் சாந்தியுடன் வாழ்வதற்கு இவர்களுக்கு வழியில்லை.
பொதுவாக வீடு, வாகனத்தை ஒருவர் பெறுவாரா மாட்டாரா? என்ற விதியை அமைப்பது
சுக்கிரனின் தன்மையாகும். அதே நேரம் சனிக் கிரகமும் இத்தகைய தேவைகளை
நிர்ணயம் செய்கிறது. பிறப்பு ஜாதகத்தில் சனி இருக்கும் ராசிக்கு 6ம்
இடத்தில் சுக்கிரன் இருந்தால் சொந்த வீடு அமைவதில் சிக்கல் ஏற்படும்.
இப்படிப்பட்ட ஜாதகம் உடையவர்கள் சனி, சுக்கிரன், கிரகங்களைச் சாந்தி
செய்வதை விட பூமிக் காரகனான செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணிய சுவாமியை
வழிபட்டு வர வேண்டும்.
வீடு, வாசல் இல்லாமல் இருப்பவர்களுக்கு செம்பு பாத்திரத்தை தானமாக கொடுக்கலாம்.
இத்தகைய ஜாதக அமைப்போடு அரிதாகத் தான் சிலர் பிறப்பார்கள் என்று நாம் நம்பினால் அது தவறு. சொத்து சுகம், வண்டி வாகனம் என்பது மனிதனுக்கு சமுதாயத்தில் கௌரவத்தை தரக் கூடியது.
இதற்கான பரிகாரங்கள் :