கிரகணத்தின் போது, ஜபம் செய்து
கொண்டிருக்கலாம். தியானம் செய்து கொண்டிருக்கலாம். தெரிந்த ஸ்லோகங்களைச்
சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ
புராணம் என பாராயணம் செய்து கொண்டிருங்கள்.
அதேபோல,
யோஸெள வஜ்ரதாரோ தேவ; ஆதித்யானாம் ப்ரபுர்தப;
ஸஹஸ்ரநயன: சந்த்ரக்ரஹ பீடாம் வ்யபோஹது
எனும்
ஸ்லோகத்தை, முடிந்தவரை சொல்லலாம். அல்லது இந்த ஸ்லோகத்தை ஒரு பேப்பரில்
எழுதி, அதை நூலில் கோர்த்து, நெற்றியில் பட்டம் போல் கட்டிக் கொள்ளலாம்.
அல்லது ஸ்லோகம் எழுதிய பேப்பரை, கிரகண வேளையில், கையில் வைத்திருக்கலாம்.
இது கிரகண வேளையில் நம்மைக் காக்கும் சக்தி கொண்ட ஸ்லோகம்.கிரகணம்
முடிந்ததும், வெற்றிலை, பாக்கு, தட்சிணை வைத்து ஆச்சார்யருக்கு
சமர்ப்பிக்கவும்.
மேலும் அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும் என முன்னோர் சொல் வாக்காகும்