Tuesday, 30 January 2018

ப்ராம்மண_சொந்தங்களுக்கு_ஓர்_ வேண்டுகோள்:

ப்ராம்மண_சொந்தங்களுக்கு_ஓர்_
வேண்டுகோள்:

நித்ய கர்மா நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஒன்று. பல காரணங்களால் நம்மில் பலர் அதை செய்யாமல் விட்டிருக்கலாம். ஆனால் நமக்கு குருவின் அருளாலும், ஆச்சாரியன் அனுக்ரஹத்தினாலும் ஒரு முறை தவறினால் பலமுறை நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. 

ஸந்தியாவந்தனம். ஆம் ப்ராத ஸந்தி என்னும் காலை ஸந்தியாவந்தனம் மற்றும் ஸாயம் ஸந்தி என்னும் மாலை ஸந்தியாவந்தனத்தை தவறாமல் செய்யலாம். மாத்யாஹ்னிகம் செய்வது எத்தனை பேருக்கு அமையும் என்பது ஈஸ்வர அனுக்ரஹம். 

உத்தியோகத்திற்கு செல்பவர்கள் - குறிப்பாக நகரங்களில் வசிப்பவர்கள் - பெரு நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் அலுவலகத்திற்கு சென்று வருவதற்கே பல மணி நேரம் செலவாகும். எனவே விடுமுறை நாட்களிலேனும் தவறாமல் மாத்யாஹ்னிகம் செய்யலாம்.

இதை சொல்வதற்காக வைதீகர்கள் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். Please let us be practical. ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ப்ராத ஸந்தியின் போது ஸஹஸ்ர காயத்ரி ஜபிக்கலாம். மாத்யாஹ்னிகம் முடித்து ப்ரம்ம யக்ஞம் செய்யலாம். 

படிக்கும் குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களிலாவது ஸமிதாதானம் செய்ய சொல்லலாம். வாரத்தில் ஒரு நாள் குறிப்பாக சனிக்கிழமை மாலையில் ஸாயம் ஸந்தியாவந்தனம் முடித்து ஸ்‌ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம் செய்யலாம். நம் குழந்தைகளுக்கும் சொல்லித் தரலாம்.

நமக்கு தெரியவில்லை என்றால் அருகில் எங்காவது கோஷ்டியாக பாராயணம் செய்யுமிடத்திற்கு சென்று கலந்து கொள்ளலாம்.

#இவை_அனைத்திற்கும்_மேலாக....

உத்தராயண, தக்ஷிணாயண புண்ணிய காலங்களில், க்ரஹண புண்ணிய காலங்களில் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம். இதனால் அபரிமிதமான பலன் ஏற்படுவதோடு இத்தனை காலம் நித்ய கர்மாவை விட்ட பாவமும் போகும். ஆனால் சாக்கு போக்கு சொல்லி கர்மாவை விடாமல், காலம் தாழ்ந்தாலும் பரவாயில்லை என்று ப்ராயச்சித்தம் செய்தேனும் ஸந்தியை செய்ய வேண்டும்.

நாளது 14-01-2018 அன்று ஞாயிற்றுக் கிழமை அன்று உத்தராயண புண்ய காலம். அன்றே ப்ரதோஷமும் கூட. எனவே இதுவரை ஸந்தியாவந்தனம் செய்யாமல் விட்டு விட்டவர்கள் அன்று முதலேனும் துவங்குங்கள். காலை, மதியம், மாலை என்று மூன்று கால ஸந்தியாவந்தனம் செய்யலாம். 

அதற்கு இரண்டு நாள் கழித்து 16-01-2018 மங்களவாரம் அன்று தை அமாவாசை. வசதி உள்ளவர்கள் சமுத்திர ஸ்நானம் செய்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது விசேஷம். சமுத்திரக்கரைக்கு போக இயலாதவர்கள் தங்கள் வீட்டிலேயே மாத்யாஹ்நிகம், முடித்து பித்ரு தர்ப்பணம் செய்யலாம்.

எதெதெற்கோ ஆபீசுக்கு லீவு எடுக்கிறோம். நம் பித்ருக்களுக்காக அன்று லீவு போட்டு விட்டு நிம்மதியாக வீட்டில் இருந்து சிராத்த காலத்தில் (காலை 11 மணிக்கு) தர்ப்பணம் செய்யலாம். வேறு வழியில்லை - ஆபீசுக்கு போயே ஆகவேண்டும் என்றால் காலை சந்தியை முடித்து விட்டு, தர்ப்பணத்தையும் முடித்து விட்டு செல்லுங்கள்.

இன்னொரு விசேஷமாக 31-01-2018 மங்களவாரம் அன்று பௌர்ணமி அன்று சந்திர கிரஹணம் வேறு. அருமையான நாள். அன்று பூர்ண சந்திர கிரஹணம். மாலை 6.22 மணிக்கு துவங்கி இரவு 8.41 மணிக்கு மோட்சம். 

மங்களவாரம் சந்திர கிரஹணம் மிகவும் விசேஷமானது. மற்ற தினங்களில் வரும் கிரஹண அனுஷ்டனத்தை விட இது கோடி மடங்கு புண்ணியம் தரவல்லது. க்ரஹண காலத்தில் குளித்து, பவித்ரம் அணிந்து, சங்கல்பம் செய்து, விசேஷமாக ஸஹஸ்ர காயத்ரி ஜபம் செய்ய வேண்டும். அன்றும் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். 

இது அனந்த பலனைக் கொடுப்பதுடன்; இத்தனை காலம் நித்ய கர்ம ஹீனர்களாக இருந்த பாபத்தையும் போக்கும். 

இந்த தை மாதத்தில் மூன்று தினங்கள் மிக மிக விசேஷமானவை. 


லோக க்ஷேமத்திற்காக நம் கடமையை செய்து;  ப்ராம்மண ஜன்மம் எடுத்ததன் பலனை அடைவோமா. தயாராக இருங்கள்.