Monday, 7 May 2018

Jaya Jaya Shankara...... Hara Hara Shankara....

Jaya Jaya Shankara...... Hara Hara Shankara....

ஒரு முறை ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தோடு வந்து காஞ்சியில் மஹா சுவாமியை வணங்கிவிட்டு , தங்கள் குறைகள் நீங்கிட வழி கூறுமாறு வேண்டினர். சில நிமிட மௌனத்திற்குப் பின் ஆச்சாரியார்

“அன்றாடமும் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது உண்டா ”

என்று கேட்டார்.

பணக்காரக் குடும்பத்தினருக்கு, ஒரு நொடி ‘சப்’பென்று போய்விட்டது. தங்களின் செல்வத்திற்கு மதிப்பு அளித்து,

‘ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு செய்’ , ‘ஆயிரக்கனக்கானவர்க்கு அன்னதானம் செய்’

என்று பெரிய அளவில் தான் எதாவது கூறுவார் என்று நினைத்திருந்தனர். இருந்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ‘செய்யப்படுகிறது’ என்றனர்.

ஆச்சரியார் அதோடு விடுவதாக இல்லை.
‘யாரால் செய்யப்படுகிறது?’ என்று வினவினார்.

இது கூடத் தெரியவில்லையா? என்ற தொனியில் ‘வேலைக்காரிதான்’ என்றாள் தனவானின் மனைவி.

மஹா ஸ்வாமிகள் பொறுமை இழக்கவில்லை. , நிதானமாக, “பூமி பூஜை செய்த புண்ணியம் வேலைக்காரியை அடைந்துவிட்டது!” என்றார்.

அவ்வளவு தான் . . . அடுத்த நொடி குடும்பமே சாஷ்டாங்கமாக பணிந்துவிட்டது.

தாய்க்குலம் குழந்தைகளை மட்டுமே அதுவும், பத்து மாதம் மட்டுமே சுமக்கிறது. பூமித் தாயோ எல்லாவற்றையும் எப்போதும் தாங்கிக் கொண்டிருக்கிறாள்.

எனவே நாம் அனைவரும் நம் குடும்பம் சிறக்க பூமி பூஜையை தினமும் நாமே செய்வோமே…

ஹர ஹர சங்கர..  ஜெய ஜெய சங்கர..
ஹர ஹர சங்கர.       ஜெய ஜெய சங்கர..