சிவபுராணம்: வல்லமை கொண்ட அழகிய சிவகுமரன் தோன்றினார்.!
ழூ நாளைய இராசிபலன்களை (28.06.2018) இன்றே அறிய இங்கே கிளிக் செய்யுங்கள் !
சிவபுராணம்..!
புறா வடிவத்தில் இருந்த அக்னி தேவர் அந்த புதிய சக்தியை தன் வாயில் ஏந்தியப்படி பறந்து சென்றார். நேரம் அதிகரிக்க அதிகரிக்க அந்த சக்தியிடமிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவை அக்னி தேவரால் தாங்க முடியாததால் அந்த சக்தியை கங்கை நதியில் போட்டுவிட்டார்.
கங்கை நதியானது அக்னி தேவர் நதிக்கரையில் விட்ட அந்த சக்தியினை யாவரும் அறியா வண்ணம் எடுத்துச் சென்றது. ஆனால், கங்கை நதியாலும் அந்த சக்தியின் வெப்பத்தை தாங்க முடியவில்லை.
பின் இமயமலையில் உள்ள சரவண பொய்கையில் தர்ப்பை புற்கள் நிறைந்த இடத்தில் அந்த சக்தியினை விட்டுவிட்டது. பின் அந்த சக்தியில் இருந்து அனைவரின் இன்னல்களை போக்கும் வல்லமை கொண்ட அழகிய குழந்தை தோன்றியது.
அப்பொழுது அங்கு நீராட வந்த ஆறு கன்னியர்கள் இந்த அழகிய குழந்தை வனத்தில் தன்னந்தனியாக இருப்பதை கண்டு வியந்தனர். பின்பு அதில் இருந்த ஒரு கன்னியர் இவன்க் என்னவன் எனக் கூற, ஆறு கன்னியர்களும் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டனர். இதைக்கண்டு அழகிய சிரிப்பை உதிர்த்த சிவகுமரன் ஆறு குழந்தைகளாக அவர்களுக்கு தோற்றம் அளித்தார்.
பின்னர் கன்னியர்கள் தங்களுக்குள் இருந்த மோதல்களை விடுத்து ஒவ்வொரு கன்னியர்களும் ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டனர். அவ்வேளையில் சிவகுமரன் அழுகவே அங்கு இருந்த கன்னியர்களே அவருக்கு தேவையான பாலை அளித்தனர்.
ஆறு கன்னியர்களிடம் இருந்து பாலை பருகியதால் குமரனை ஆறுமுகன் என்றும் அழைக்கின்றோம். தியான நிலையில் இருந்து தன் பழைய நிலைக்கு பார்வதியும், சிவபெருமானும் வந்ததும் நம் மைந்தன் எங்கே என பார்வதி தேவி வினவினார்.
எம்பெருமானோ இங்கு நிகழ்ந்த யாவற்றையும் உணர்ந்து பின் பார்வதி தேவியிடம் அமைதி கொள்வாய் தேவி என்று கூறினார். பின் தேவியின் மனமோ மிகவும் சங்கடத்திற்கு உள்ளானது.
சிவபெருமான் பார்வதி தேவியிடம் நம் மைந்தன் நலமுடன் இருக்கிறான் கவலை கொள்ள வேண்டாம் தேவி. காலம் கணியும்போது நாம் குமரனை காணச் செல்வோம் என கூறினார்.
பதியின் கூற்றுகளில் உண்மை இருக்கும் என உணர்ந்த பார்வதி தேவி குமரனை பற்றிய கவலைகள் இருந்த போதும் அதை வெளிக்கொள்ளாமல் இருந்தார்.
- சிவபுராணம் நாளையும் தொடரும்....