Friday, 29 June 2018

பூர்ண சந்திரகிரஹணம்

பூர்ண சந்திரகிரஹணம்

'(கேது க்ரஸ்த ஸோமோபராக புண்யகாலம்)
விளம்பி வருடம் ஆடி மாதம் 1ம் நாள்
(27-07-2018) வெள்ளிக்கிழமை இரவு பெளர்ணமி
உத்திராட நட்சத்திரத்தில் கிரஹணம் நிகழ்கிறது.
இந்த கிரஹணத்தை இந்தியாவில் உள்ள
அனைத்து ஊர்களிலும் நன்கு காணமுடியும்.
கிரஹண ஆரம்பம் 27-07-2018 இரவு 11.54 மணி
கிரஹண மத்தியம் 28-07-2018 அ.காலை 1.59 மணி
கிரஹண முடிவு 28-07-2018 ஆ.காலை 3.49 மணி
0 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்குள் சாப்பாடு முடித்துக்கொள்ள வேண்டும்.
பெளர்ணமி திதி ச்ரார்த்தம் மறு நாள் சனிக்கிழமை செய்யவேண்டும்.
பூராடம், கார்த்திகை, உத்திரம், உத்ராடம், திருவோணம், ரோஹிணி,
ஹஸ்தம், அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், வெள்ளிக்கிழமை
பிறந்தவர்களும் மறு நாள் சனிக்கிழமை சாந்தி செய்துகொள்ளவும்.
கர்ப்பிணிஸ்திரிகள் வெள்ளிக்கிழமை இரவு 11.45 முதல் இரவு 3.55 வரை
சந்திரனை பார்க்க கூடாது.