சம்பந்தர் தேவாரம்
திருக்கோலக்கா திருப்பதிகம்
குறிப்பு: சீகாழிக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் உள்ளத்தலம் "திருக்கோலக்கா" என்பதாம்
தற்காலத்தே திருத்தாளமுடையார்கோயில் என வழங்குகிறது. "திருஞானசம்பந்த பெருமான் திருமுலைப்பால் உண்டருளிய மறுநாள், இத்தலத்திற்கு எழுந்தருளி அங்கை கொட்டி தாளம் இட்டுப் பாடினார்.
பெருமானின் பிஞ்சு கரங்கள் சிவக்கப்பொறாத இறைவர் திருவருளால் திருவைந்தெழுத்து எழுதப்பெற்ற பொற்றாளம் இவர் கைவந்தருளப்பெற்றது.
கிழக்குப் பார்த்த சந்நிதி. கோயில் வாயிலில் அழகான தீர்த்தம் இருக்கிறது. சீகாழி திருமுலைப்பால் விழா அன்று மாலை ஞானசம்பந்த சுவாமி இங்கு எழுந்தருளுவர்.
"மடையில் வாளை" என்று பெருமான் இங்கு பாடிய பதிகத்தின் 2 முதல் 4 வரையிலான பாடல்கள் இவை
பண்: தக்கராகம்
பாடல்
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டா னஞ்சை யுலக முய்யவே.
பூணற் பொறிகொ ளரவம் புன்சடை
கோணற் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறைவல் லானையே
பேணப் பறையும் பிணிக ளானவே.
தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ண மேத்தி வாழ்மினே.
பொருள்
உமையம்மையைத் தன் திருமேனியில் இடப் பாதியாகக்கொண்டு, கலைகள் ஒன்றொன்றாகக் குறைந்து வந்த இளம் பிறையைச் சடைமுடி மீது ஏற்றுக் கொண்டவனாகிய சிவபிரான், கோலக்காவிலுள்ள கோயிலைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். திருப்பாற்கடலில் நஞ்சு தோன்றியபோது காவாய் என அனைவரும் கைகூப்பி வணங்க உலகம் உய்யுமாறு அந்நஞ்சினை உண்டு அருளியவன்.
அழகிய புள்ளிகளை உடைய பாம்பை அணிகலனாகக் கொண்டு, சிவந்த சடையின்மேல் வளைந்த பிறைமதியைச் சூடிய, என்றும் மாறா இளமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் திருக்கோலக்காவை மாட்சிமை தங்கப்பாடி, வேதங்களை அருளிய அப்பெருமானைப் பேணித் தொழப்பிணிகளானவை நீங்கும்.
பல்வேறு சமயங்களிலும் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களே! மழுவாயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட செல்வனும், மானை ஏந்திய அழகியகையை உடையவனும், பூதங்களின் குழுக்களை உடையவனும் ஆகிய சிவபிரானது கோலக்காவைத் தவறாமல் சென்று தரிசித்து வாருங்கள். நும் பாவங்கள் அகலும்.
தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂