சிவகுமரனான கார்த்திகேயன் கைலாய மலைக்கு வருகை புரிதல்.!
சிவபுராணம்..!
சிவபுராணம்..!
கன்னியர்களோ வந்திருப்பவர்கள் யார் என்பதை அறிந்து பணிந்து வணங்கினர். பின் குமரனிடம் தாங்கள் அறுவரும் உன்னை வளர்த்தவர்கள் மட்டுமே என்று கூறினர்.
உன்னை ஈன்றவர் அனைத்திற்கும் தாயான பார்வதி தேவி என்று உரைத்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத குமரன் மிகுந்த குழப்பத்திற்கு ஆளானார்.
பின்பு எம்பெருமான் குமரனின் பிறப்பில் உள்ள அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
ஒருபுறம் தன்னை ஈன்றவர்கள், மறுபுறம் தன்னை வளர்த்தவர்கள் என மனதில் குழப்பத்துடன் இருந்தார் குமரன். பின் ஆறு கன்னியர்களும் முருகனிடம் சென்று அனைத்தையும் அவர் புரியும் பொருட்டு எடுத்துரைத்தனர்.
தாங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு வந்த போது இருந்த நிலையையும் எடுத்துக்கூறி பார்வதி தேவியின் மகத்துவத்தை எடுத்துரைத்தனர்.
பின் தன்னை ஈன்ற தாயிடம் சென்று தங்களிடம் அவ்விதம் கூறியமைக்கு மன்னிக்க வேண்டினார் குமரன்.
பின் குமரன் பார்வதி தேவியை தன் தாயாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்.
குமரனுக்கு குழந்தை முதலே கார்த்திகை பெண்களான அறுவர் பாலு}ட்டி சீராட்டி வளர்த்து வந்தார்கள். அதன் பொருட்டு சிவபெருமான் குமரனுக்கு கார்த்திகை பெண்கள் பாலு}ட்டி வளர்த்து வந்தமையால் இனிமேல் குமரன் 'கார்த்திகேயன்" என்று அழைக்கப்படுவான் என்றும், கார்த்திகை பெண்களான கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகேயனை எண்ணி விரதமிருக்கும் அனைவரின் வாழ்விலும் இருந்த இன்னல்கள் யாவும் நீங்கி சகல வசதிகளையும் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என கூறி அருள் பாவித்தார்.
பின் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் கார்த்திகேயனுடன் கைலாய மலைக்கு வந்தனர். பின்பு தேவர்களின் அரசனான தேவேந்திரன் இனியும் காலம் தாமதிக்காமல் தாரகாசுரன் மீது படையெடுத்து அவனை சம்காரம் செய்ய வேண்டும் என எம்பெருமானிடம் உரைத்தார்.
தேவேந்திரன் கார்த்திகேயனை படைக்கு தலைவனாக்கி பின் தாரகாசுரனோடு போர் புரிய தயாராக வேண்டும் என்று கூறினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....