சிவபுராணம்: தேவர்களுக்கு எம்பெருமான் கூறிய உபாயம்!
சிவபுராணம்..!
தேவர்களின் கோரிக்கைகளை கேட்ட எம்பெருமான் அவர்களிடம் திரிபுர அசுரர்களை என்னால் வதம் செய்ய இயலாது என்று கூறினார்.
ஏனென்றால், அவர்கள் இறைவன் மீது கொண்டுள்ள சிறந்த பக்தியும், அளவற்ற நம்பிக்கையும் கொண்டுள்ளார்கள். அவர்களை என்னால் இக்காலத்தில் வதம் செய்ய இயலாது.
அவர்கள் இறை எண்ணங்கள் விடுத்து அழிவு பாதையில் செல்லும் காலத்தில் மட்டுமே அவர்களை என்னால் அழிக்க முடியும் என்று கூறினார். இதனால் தங்களை இந்த இன்னல்கள் மிகுந்த சு+ழலில் இருந்து எம்பெருமான் காப்பாற்றுவார் என எதிர்பார்த்த தேவர்கள் மனம் வருந்தினார்கள்.
பின்பு தேவர்கள், சர்வங்களை உள்ளடக்கிய தாங்கள் இவ்விதம் கூறினால் நாங்கள் யாது செய்ய இயலும் சர்வேஸ்வரா என்றனர். எம்பெருமானோ! உங்களின் இன்னல்களை போக்கவும், திரிபுர அசுரர்களையும் அழிக்கவும், வல்லவரான மாய கலையில் மாயாவியாக விளங்கும் திருமாலிடம் சென்று உங்கள் இன்னல்களை கூறி உபாயம் ஏதேனும் உள்ளதா?
என அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயலாற்றுங்கள் என்று கூறினார்.
பிறகு தேவர்கள் எம்பெருமானிடம் விடை பெற்று வைகுண்டத்தில் வீற்றிருக்கும் திருமாலை காண சென்றனர். ஆதிசேஷன் மீது துயில் கொண்ட திருமாலையும், அவரின் பாதங்களில் அமர்ந்திருந்த லட்சுமி தேவியையும் கண்டு வணங்கினர்.
பின்பு தாங்கள் வந்த நோக்கத்தினையும், திரிபுர அசுரர்களால் அடைந்த இன்னல்களையும் சர்வேஸ்வரன் அதற்கு அளித்த உபாயத்தையும் தேவர்கள் கூறினார்கள்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....