எந்தெந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்?
1. என் தாயின் நினைவாக அமாவாசை விரதம் இருக்கலாமா?
உங்கள் தாயின் நினைவாக அமாவாசை விரதம் இருக்கலாம்.
உடல் நிலைக்கு தகுந்த மாதிரி விரதங்களை அனுசரிக்கவும்.
2. கர்ப்ப காலங்களில் இப்போது இருக்கும் வாடகை வீட்டிலிருந்து மற்றொரு வாடகை வீட்டிற்கு குடி போகலாமா?
கர்ப்ப காலங்களில் இப்போது இருக்கும் வாடகை வீட்டிலிருந்து மற்றொரு வாடகை வீட்டிற்கு குடி போகக்கூடாது.
3. மூவர் அகால மரணம் அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உங்களை வருத்திக் கொண்டிருந்த பிரச்சனைகள் கூடிய விரைவில் அகலும்.
4. கிருத்திகை தினத்தன்று கூழ் ஊற்றலாமா?
கிருத்திகை தினத்தன்று கூழ் ஊற்றலாம்.

5. நான் ரிஷப லக்னம், சிம்ம ராசி. எந்த ராசிக்கல் அணிய வேண்டும். அதை வெள்ளி மோதிரத்தில் அணியலாமா?
வைரக்கற்களை வெள்ளி மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்ளலாம்.
6. 8ல் சனியும், குருவும் இணைந்திருந்தால் என்ன பலன்?
நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.
பொறுமை குணம் மிகுந்தவர்கள்.
தீர்க்கமான ஆயுள் உடையவர்கள்.
பல கலைகளில் திறமை உடையவர்கள்.
7. ஆண்கள் எந்தெந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்?
ஆண்கள் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.