Tuesday, 30 October 2018

சூரிய நாராயணர் பற்றி பாகவத்தில் கூறப்படும் விரிவான தகவல்கள்

சூரிய நாராயணர் பற்றி பாகவத்தில் கூறப்படும் விரிவான தகவல்கள்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

🍀 சூரிய நாராயணர்  பச்சைநிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு.

🍀 அந்த ஏழு குதிரைகளின் பெயர்கள் காயத்ரி, ப்ருஹ்தி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பக்த்தி

🍀 இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் (தேர் சாரதி)அருணன்.

🍀 சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த ரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளும் உண்டு.

🍀 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கிறது. சூரியபகவான் தன்னுடைய தேரில் 4 பட்டணங்களை சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.

🍀 சூரியன் ஒருவராக இருந்தாலும் 12ராசிகளில் சஞ்சரிப்பதன் காரணமாக, பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார்.





அவர்கள்👇👇👇

1.சித்திரை மாதம் - தாதா
2.வைகாசி மாதம் - அரியமா
3.ஆனி மாதம் - மித்திரன்
4.ஆடி மாதம் - வருணன்
5.ஆவணி மாதம் - இந்திரன்
6.புரட்டாதி மாதம் - விஷ்வான்
7.ஐப்பசி மாதம் - பூஷா
8.கார்த்திகை மாதம் - விதாதா
9.மார்கழி மாதம் - அம்ஷன்
10.தை மாதம் - பஹன்
11.மாசி மாதம் - துவஷ்டா
12.பங்குனி மாதம் - விஷ்ணு

🍀 சூரியனின் தேரின் நீளம் 18000 யோஜனை தூரம்
 ( 1 யோஜனை - 15 km :18000 ×15 )

🍀 சூரியனின் தேரை ஓட்டும் கடிவாளமாக (கயிறு) சர்ப்பங்களே இருக்கும்.இவை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சர்ப்பமாக இருக்கும்.

அவையாவன 👇👇👇

1.சித்திரை மாதம் - வாசுகி
2.வைகாசி மாதம் - கம்ஷவீரன்
3.ஆனி மாதம் - தக்ஷகன்
4.ஆடி மாதம் - நாகன்
5.ஆவணி மாதம் - ஏலாபுத்திரன்
6.புரட்டாதி மாதம் - ஷங்கபாலன்
7.ஐப்பசி மாதம் - தனஞ்ஜெயன்
8.கார்த்திகை மாதம் - ஐராவதம்
9.மார்கழி மாதம் - மஹாபத்மன்
10.தை மாதம் - கார்க்கோடகன்
11.மாசி மாதம் - கம்பலன்
12.பங்குனி மாதம் - அஸ்வதரன்

🍀 சூரியனின் தேரை செலுத்தும் போது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ரஷி வேதம் ஓதிக்கொண்டே வருவார்.

அவர்கள் 👇👇👇

1.சித்திரை மாதம் - புலஸ்த்தியர்
2.வைகாசி மாதம் - புலகர்
3.ஆனி மாதம் - அத்ரி
4.ஆடி மாதம் - வஷிஷ்டர்
5.ஆவணி மாதம் - அங்கிரஸ்
6.புரட்டாதி மாதம் - பிருகு
7.ஐப்பசி மாதம் - கௌதமர்
8.கார்த்திகை மாதம் - பரத்வாஜர்
9.மார்கழி மாதம் - கஷியப்பர்
10.தை மாதம் - கிரது(தி)
11.மாசி மாதம் - யமதக்னி
12.பங்குனி மாதம் - விஷ்வாமித்ரர்

🍀 இவ்வாறு வேதம் ஓதும் போது ஆதித்தியனை ஸ்தோத்திரம் பண்ணவதற்கு ஓவ்வொரு கந்தர்வன் இருப்பானாம்.

அவர்கள் 👇👇👇

1.சித்திரை மாதம் -  தும்புரு
2.வைகாசி மாதம் -நாரதர்
3.ஆனி மாதம் - ஹாஹா
4.ஆடி மாதம் - ஹூ ஹூ
5.ஆவணி மாதம் - விஷ்வாவஸு
6.புரட்டாதி மாதம் - உக்கிரசேனன்
7.ஐப்பசி மாதம் - வசுருஷி
8.கார்த்திகை மாதம் - விஸ்வஸு
9.மார்கழி மாதம் - சித்திரசேனன்
10.தை மாதம் - ஊர்னாயூ
11.மாசி மாதம் - திருதராஸ்டிரன்
12.பங்குனி மாதம் - சூரியவக்ஷன்

🍀 அது மட்டுமல்லாது ஒவ்வொரு மாதமும் தேரின் முன் ஒவ்வொரு அப்ஷரஸ் ஸ்த்ரீ நடனமாடிக்கொண்டு வருவாளாம்.

அவர்கள் 👇👇👇

1.சித்திரை மாதம் - கிருஸ்தலா
2.வைகாசி மாதம் - புஞ்சிகஸதலா
3.ஆனி மாதம் - மேனகா
4.ஆடி மாதம் - ஷஹஜன்வா
5.ஆவணி மாதம் - பிரம்லோஹா
6.புரட்டாதி மாதம் - அனும்லோஷா
7.ஐப்பசி மாதம் - க்ருதாஷி
8.கார்த்திகை மாதம் - விஷ்வாஷி
9.மார்கழி மாதம் - ஊர்வசி
10.தை மாதம் - பூர்வஷித்தி
11.மாசி மாதம் - திலோத்தமா
12.பங்குனி மாதம் - ரம்பா

🍀 இவை தவிர ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு யக்ஷன் இருப்பானாம்,
இவனே கடிவாளத்தை குதிரையோடு சேர்த்து கட்டி அருணனிடம் கொடுப்பானாம்.அருணன் எப்பொழுதெல்லாம் கடிவாளத்த கீழே போடுகிறானோ அப்பொழுதெல்லாம்  கடிவாளத்தை எடுத்து கொடுப்பதே இவனின் வேலையாம்.

அவர்கள் 👇👇👇

1.சித்திரை மாதம் - ரதவிருத்
2.வைகாசி மாதம் - ரதவ்யஸ
3.ஆனி மாதம் - ரதஸ்வன்
4.ஆடி மாதம் - ரதஸித்ரன்
5.ஆவணி மாதம் - சுரோதன்
6.புரட்டாதி மாதம் - அபூர்ணன்
7.ஐப்பசி மாதம் - சுஷேனன்
8.கார்த்திகை மாதம் - ஷேனஜிது
9.மார்கழி மாதம் - தார்ஸீயன்
10.தை மாதம் - அரிஷ்டநேமி
11.மாசி மாதம் - ருதஜிது
12.பங்குனி மாதம் - சத்தியஜிது

🍀 இவர்களோடு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராட்சஷனும் தேரின் பின் இருப்பானாம்.யாராலேயேனும் தேருக்கு ஆபத்து நேராமலிருக்க காப்பதற்கு வந்து கொண்டிருப்பதே இவன் வேலையாம்.

அவர்கள் 👇👇👇

1.சித்திரை மாதம் - ஹேதீ
2.வைகாசி மாதம் - பிரஹேதீ
3.ஆனி மாதம் - பௌருசேயன்
4.ஆடி மாதம் - ரதன்
5.ஆவணி மாதம் - ஷர்பி
6.புரட்டாதி மாதம் - வியாக்ரன்
7.ஐப்பசி மாதம் - வாதன்
8.கார்த்திகை மாதம் - ஆபன்
9.மார்கழி மாதம் - வித்யுத்
10.தை மாதம் - ஸ்பூர்ஜன்
11.மாசி மாதம் - ப்ரமோபேதன்
12.பங்குனி மாதம் - யக்ஞோபேதம்

🌺சூரியனோடு சேர்ந்தவை

திசை - கிழக்கு
அதிதேவதை - அக்னி, சிவன்
ஜாதி - ஷத்திரியன்
நிறம் - சிவப்பு
தானியம் - கோதுமை
மலர் - செந்தாமரை
ஆடை - சிவப்பு நிற ஆடை
ரத்தினம் - மாணிக்கம்
நிவேதனம் - சர்க்கரைப் பொங்கல்
விருட்சம் - வெள்ளெருக்கு
உலோகம் - தாமிரம்
இனம் - ஆண்
சுவை - காரம்
மணம் - சந்தன வாசனை
சூரியனுக்குரிய திதி - சப்தமி
கிழமை - ஞாயிறு
 
             சர்வம் கிருஷ்ணார்ப்பணம்