திருப்பாவையின் 15 பாசுரங்களின் அர்த்தங்கள்..!
முதல் பாசுரத்தில் வரும் மார்கழித் திங்கள் என்ற பாடல், நோன்புக்கான நேரத்தையும், நோன்புக்கான மூலப்பொருளாக விளங்கும் பெருமாளை குறித்தும் பாடப்படுவது ஆகும்.
முதல் பாசுரத்தில் வரும் மார்கழித் திங்கள் என்ற பாடல், நோன்புக்கான நேரத்தையும், நோன்புக்கான மூலப்பொருளாக விளங்கும் பெருமாளை குறித்தும் பாடப்படுவது ஆகும்.
இரண்டாவது பாசுரத்தில் வரும் வையத்து வாழ்வீர்காள் என்ற பாடல், நோன்பின்போது செய்யத்தகாதவை பற்றி பாடப்படுவது ஆகும்.
மூன்றாவது பாசுரத்தில் வரும் ஓங்கி உலகளந்த என்ற பாடல், நோன்பினால் விளையும் நன்மைகள் குறித்து பாடப்படுவது ஆகும்.
நான்காவது பாசுரத்தில் வரும் ஆழிமழைக்கண்ணா என்ற பாடல், மழைக்காக வருணனை வேண்டி பாடப்பட்டது ஆகும்.
ஐந்தாவது பாசுரத்தில் வரும் மாயனை மன்னு வடமதுரை என்ற பாடல், நோன்புக்கு ஏற்படக் கூடிய தடைகளை கண்ணனே நீக்க வல்லவன் என்று போற்றி பாடப்பட்டுள்ளது.
ஆறாவது பாசுரத்திலிருந்து 15-வது பாசுரம் வரையில், கோகுலத்தில் வாழும் கோபியரிடம், உறக்கம் விட்டெழுந்து, கண்ணனைத் தரிசித்து வணங்கச் செல்லும் அடியவர் கூட்டத்தோடு சேருமாறு அழைப்பது பற்றி பாடப்பட்டுள்ளது.
பதினாறாவது பாசுரத்தில் வரும் நாயகனாய் நின்ற என்ற பாடல், நந்தகோபர் மாளிகையில் உள்ள துவார பாலகரை எழுப்பி, உள்ளே செல்ல அனுமதி தர வேண்டும் என்பதைப் பற்றி பாடப்பட்டுள்ளது.
பதினேழாவது பாசுரத்தில் வரும் அம்பரமே என்ற பாடல், நந்தகோபர், யசோதா பிராட்டி, கண்ணபிரான், பலராமன் என்று நால்வரையும் விழித்தெழுமாறு வரிசையாக அவர்களை அழைப்பது பற்றி பாடப்பட்டுள்ளது.
பதினெட்டாவது பாசுரத்தில் வரும் உந்து மதக்களிற்றன் என்ற பாடல், நப்பின்னை பிராட்டியை விழித்தெழ வேண்டி பாடப்பட்டுள்ளது.
பத்தொன்பது மற்றும் இருபதாவது பாசுரங்களில் நப்பின்னை, கண்ணன் என்று இருவரையும் ஒரு சேர, உறக்கம் விட்டு எழுந்து வர வேண்டும் என்பதைப் பற்றி பாடப்பட்டுள்ளது.