மனநிம்மதி கிடைக்க ஆண்டாளை வணங்குங்கள்..!
✳ திருமாலை அன்றி ஒருவரையும் கணவராக ஏற்க மறுத்தவர் ஆண்டாள். அதற்காக பாவை நோன்பை மேற்கொண்டு, தன் விருப்பப்படியே திருமாலை மணம் புரிந்தவர்.
✳ பாவை(பெண்) ஒருவர் பாடியதாலும், பெண்கள் இருக்கும் நோன்பைப் பற்றிய பாடல் என்பதாலும், ஆண்டாள் பாடிய பாடல் திருப்பாவை என்று பெயர் பெற்றது.
✳ திருப்பாவை மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது. திருப்பாவையின் முதல் பாடலானது, திருப்பாவையின் தொகுப்பு பாடப்பட்டதற்கான நோக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் சுருக்கமாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 2 முதல் 5 வரையுள்ள பாடல்கள், திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள நாராயணரின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.
✳ ஆறு முதல் பதினைந்து வரையுள்ள துதிப்பாடல்கள், ஆழ்வார்களுக்கு ஒப்பாக, பெண் தோழியர்களை கற்பனை செய்து கொண்டு அவர்களை எழுப்பி, நீராடிவிட்டு கோவிலுக்கு செல்வதை சொல்கிறது. அடுத்து வரும் பதினைந்து பாடல்களும், உன்னையே கணவனாக எண்ணிக் கொண்டுள்ள என்னை ஏற்றுக்கொள் என்று வெண்ணெய் உண்டவனை நினைத்து உருகிப்பாடுவதாக அமைந்திருக்கிறது.
மனநிம்மதி தரும் ஆண்டாள் :
✳ இத்தனை பெருமைமிக்க ஆண்டாளாகிய மகாலட்சுமியிடம் நாம் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.
✳ ஆனால் செல்வம் இருந்தால் மனநிம்மதி கிடைத்துவிடுமா? அந்த நிம்மதியைத் தருபவர் தான் ஆண்டாள்.
✳ ஆண்டாள் பூமாதேவியின் அவதாரம் என்பதால் பொறுமை குணம் வாய்ந்தவர். நாம் அறிந்தும் அறியாமலும் செய்கின்ற தவறுகளை உணர்ந்து ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டால் பகவானிடம் கூறாமல் மறைத்து விடுவார்.
✳ அதேநேரம், ஏதேனும் ஒரு நல்லது செய்தால், அதை பெருமாளிடம் பெரிதாகக் கூறி, வேண்டிய வரத்தை வாங்கித்தந்து அருள் புரிவார். ஆண்டாளை பரமகாருண்ய தேவதை என்று கூறுவர்.
✳ மனிதனாகப் பூமியில் பிறந்த நாம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து, தான் செய்த பாவங்களையெல்லாம், ஒரு முறையாவது ஆண்டாளிடம் சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும். நாம் மனதார மன்னிப்பு கேட்பதால், அவர் மனம் இறங்கி அவற்றையெல்லாம் மறைத்து, மனம் திருந்திவிட்டதை மட்டும் பகவானிடம் எடுத்துச்சொல்லி மன்னிப்பைப் பெற்றுத் தருவார். நாமும் குற்றமற்ற மனதுடன் மனநிம்மதி பெற்று வாழலாம்.