அருள்மிகுமேல்மலையனூர் #அங்காளபரமேஸ்வரி_அம்மன் #திருக்கோவில்.🚩
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன.
அவற்றில் குறிப்பிடத்தக்கது மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை விளங்குகிறாள்.
#தல_வரலாறு
ஆதியில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் பிரம்மா யாரையும் மதிக்காமல் ஆணவத்துடன் நடந்து கொண்டார். அவருக்கு பாடம் கற்பிக்கும் வகையில்,
பரமேஸ்வரன் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒருதலையை வெட்டினார்.
தன் தலைவனின் ஒரு தலை பறிபோக காரணம் அம்பிகைதான் என்று கருதிய கலையரசியான சரஸ்வதி, பராசக்தி மேல் கோபம் கொண்டு, “சக்தி… நீ அரண்மனையில் வாழ்ந்தாய்.
இனி நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாக கொண்டு வாழ்வாய்”என்று சபித்தாள் கலைவாணி.
சரஸ்வதியின் சாபத்தால் பர்வத இராஜ புத்திரியாக திகழ்ந்த அன்னை பார்வதிதேவி பூலோகத்தில் தோன்றி, இருக்க இடம் இல்லாமல் எங்கு தங்குவது என்று தெரியாமல் அவதிப்பட்டாள்.
இப்படியே பல இடங்களுக்கு சென்று களைப்படைந்து நிற்கும் போது ஒர் இடத்தில் நறுமணம் வீசியது. அந்த திசையை நோக்கி நடந்தாள்.
அந்த இடம் அழகான நந்தவனமாக இருந்தது. அவ்விடத்திலேயே அமர்ந்து தவம் செய்ய தொடங்கினாள்.
இந்த காட்சியை கண்ட அங்கு காவலுக்கு இருந்த மீனவ இனத்தை சார்ந்தவன், “ ஏய் பெண்ணே… இது இந்த நாட்டின் மலையரசனுக்கு உரிமையான இடம். இங்கு நீ தவம் செய்வது உனக்கு நல்லதல்ல.
எங்கள் அரசர் தெய்வ நம்பிக்கை அற்றவர்.
நீ தவம் செய்யும் தகவல் அரசருக்கு தெரிந்தால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம்.
ஆகவே இங்கிருந்து போய் விடு”என்று எச்சரித்தான்.“மகனே… இந்த பூமியே என் சொந்த இடம் தானப்பா. இவ்விடத்தை உன் மலையரசனுடையது என்று நீ கூறுவது நகைப்புக்குரியதடா.
நான் இங்குதான் தவம் செய்வேன்”என்று சொன்னாள் பராசக்தி.அதற்கு அந்த காவலன்,“ஏதோ உனக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன்.அதான் பாவம் இங்கு வந்து மாட்டிக் கொண்டாய்”என்றான்.உடனே அன்னை புன்னகைத்தப்படி தன் உடலை புற்று மண்ணால் மூடினாள்.அந்த காட்சியை பார்த்தவன் பிரமித்து போனான்.
இந்த பெண், அன்னை பராசக்தி என்பதை உணர்ந்தான். அம்பிகை மீது பக்தி உண்டானது. மக்களிடம் சொன்னான்.
நந்தவனத்தில் திடீர் புற்று உருவானதை அறிந்த மக்கள் அதிசயித்தனர்.
புற்றை பலர் வந்து பார்த்தார்கள்.
இந்த தகவல் அரசருக்கு தெரிந்து,“எனக்கு சொந்தமான தோட்டத்தில் புற்று இருக்கிறதா? இதை உடனே இடித்து தள்ளுங்கள்”என்று உத்தரவிட்டான்.
புற்றை இடிப்பது பெறும் பாவம்,அதை செய்யாதீர்கள் என்று எத்தனையோ பேர் கூறியும் கேட்கவி்லலை அரசர். பணியாளர்கள் புற்றை உடைத்தார்கள்.
அப்போது அருகில் இருந்த மீனவ இனத்தை சார்ந்த அந்த காவலன்,அந்த புற்று மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து வைத்து கொண்டான்.புற்றை உடைத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து சென்று விட்டார்கள் அரசரின் பணியாளர்கள்.
அவர்கள் போன பிறகு தன் கையில் இருந்த புற்று மண்ணை அந்த இடத்தில் மறுபடியும் வைத்து பூஜை செய்தான் மீனவன்.புற்று மறுபடியும் வேகமாக உருவானது.
இந்த செய்தியை கேள்விப்பட்ட அரசன், மறுபடியும் பணியாளர்களை அனுப்பினான்.
புற்றை உடைக்க புற்றின் அருகில் சென்றவுடன் அன்னைக்கு காவலாக வந்து நின்ற சிவபூதங்கள் அந்த பணியாளர்களை கொன்றார்கள்.
இதற்கெல்லாம் காரணம் அந்த மீனவன் தானே என்று கோபம் கொண்ட அரசன்,அந்த மீனவனை கொன்று விடுங்கள் என்று கையை நீட்டி காவலர்களுக்கு உத்தரவிட்டான். உத்தரவிட்ட அந்த நொடி,அரசனின் கை உணர்ச்சி இன்றி அப்படியே தளர்ந்தது.
கை வேலை செய்யவில்லை.
இது தெய்வ மகிமைதான் என்று புரிந்துக் கொண்டான்.
தன் தவறுக்கு மனப்பூர்வமாக அன்னை ஆதிபராசக்தியிடம் மன்னிப்பு கேட்டான்.தான் இங்கே இருப்பதை உலகிற்கு தெரியப்படுத்த மீனவனையும் அரசனையும் கருவியாக பயன்படுத்தினாள் அன்னை அங்காளபரமேஸ்வரி.
அம்மன் அரசனை மன்னித்தாள்.
தன் தவறுக்கு பரிகாரமாக அந்த பூந்தோட்டத்தை அம்மனுக்கே காணிக்கையாக வழங்கினான் மன்னன்.அம்மனுக்கு உதவியாக இருந்த மீனவ சமுதாயம்தான் இன்றுவரை அந்த கோயிலில் சேவை செய்கிறார்கள்.
#பிரம்மஹத்தி_தோஷம்
பிரம்மாவின் தலையை வெட்டியதால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.
சித்தம் கலங்கி,பித்துபிடித்த நிலையில் கையில் மண்டையோடும்,
மற்றொரு கையில் சூலாயுதத்துடனும் உடலெங்கும் சாம்பலைபூசி கொண்டு ஊர்,ஊராக அலைந்து திரிந்தார்.நாடு முழுவதும் அலைந்து திரிந்த சிவன் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தார்.அங்காள பரமேஸ்வரி அம்மன்,சிவன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு,சாதத்தை கீழே சிதறிபோகும் படி செய்தார்.அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை அடக்கினார். அப்போது சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.
கபாலத்தை அடக்கிய பிறகும், அங்காளம்மனின் கோபம் தணியவில்லை.
அவளது கோபத்தை தணிப்பதற்காக மகாவிஷ்ணுவின் யோசனைப்படி தேர்த்திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. தேவர்களும்,
முனிவர்களும் அந்த ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும்,
மாடங்களாகவும், மரப்பலகைகளாகவும்,
சிம்மாசன மேடையாகவும் மாறி நின்றனர். அங்காள பரமேஸ்வரி கோபம் தணிந்து அந்த தேரில் ஏறி அமர்ந்து வீதி வலம் வந்தாள்.
தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்து விடுகின்றனர்.இந்த ஐதீகத்தின்படி ஒவ்வொரு வருடமும் தேரோட்ட நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்த தேரை பிரித்துவிடுவார்கள்.
அடுத்த வருட தேரோட்டத்துக்கு புதிய தேர் செய்யப்படும்.
ஆண்டு தோறும் மகாசிவராத்திரியையொட்டி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறும்.அப்போது நடைபெறும் தேரோட்டத்தின் போது புதிதாக தேர் செய்யப்படும்.அந்த தேரில் அம்மன் அமர்ந்து வீதிஉலா வருவார்.இந்த முறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
#அமைவிடம்
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.