Sunday, 5 July 2020

சிவனருள் கிடைக்க சிவாலயங்களில் செய்யவேண்டிய வழிமுறைகள் ஆன்மிக செய்திகள்/ சிவாலயங்களின் சிறப்பு

சிவனருள் கிடைக்க சிவாலயங்களில் செய்யவேண்டிய வழிமுறைகள்

சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங் களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும். 

பிராகாரத்தில் பிரதட்சணம் செய்யும் பொழுது மிகவும் நிதானமாகச் செய்ய வேண்டும். 

உட்பிராகார பிரதட்சணத்தைவிட வெளிப்பிராகார பிரதட்சணமே மிகவும் சிறந்தது. 

ஆலயத்தில் குறைந்தது மும்முறை கொடிமரத்துக்கு அருகே வணங்க வேண்டும். மும்முறை வலம் வர வேண்டும். 




அபிஷேக காலத்தில் பிரதட்சணம் செய்யக்கூடாது.கொடிமரத்தையும் சேர்த்துபிரதட்சணம் செய்ய வேண்டும். 

ஆலயத்தை விட்டு வெளிவரும்போது கொடிமரத் துக்கு அருகில் வணங்க வேண்டும். ஆலயத்துக்குள் எந்த சந்நிதியிலும் வணங்கக்கூடாது. 

இறைவன், இறைவிக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது பிரதட்சண நமஸ்காரங்களைத் தவிர்க்க வேண்டும். ஆலயத்தில் ஆண்ட வனைத் தவிர வேறு எவரையும் வணங்கக்கூடாது. 

ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும். நல்லெண்ணைய் ஆரோக் கியத்தை அளிக்கும். 




தேங்காய் எண்ணை வசீகரத்தை அளிக்கும். இலுப்ப எண்ணை சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும். மறு ஜென்மத்திலும் நன்மை அளிக்கும். 

திருமணமாகி 5ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் ஸ்ரீதட்சணாமூர்த்தி அஷ்டகத்தை வியாழக் கிழமைகளில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒன்பது தடவை பாரா யணம் செய்தால் பலன் கிடைக்கும். 

சிவாலய வழிபாடு செய்யும் போது லிங்கத் திற்கு வலப்புறம் இருந்து பணிய வேண்டும். 

பூவும், நீரும் சிறந்த சிவபுண்ணியம். செல் வமும், அமைதியும் பெற மகேசனை பூவும், நீரும் கொண்டு வழிபட வேண்டும். 

சிவனின் திருமேனியில் சந்தனக்காப்புப் பொருத்திக் குளிர்வித்தால் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் குளிர்விப்பது போல் ஆகும். 

கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலான நறுமணப் பொருள்கள் கலந்து இறைவனுக்கு ஒரு முறை சந்தனக் காப்பு செய்தவர்கள் தேவ வருடத்தில் கோடி வருடம் சிவலோகத்தில் இன் புற்றிருப்பார்கள். 
பிரதட்சணத்தின் போது தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும். நிலம் அதிர நடக்கக் கூடாது. பிறருடன் பேசிக் கொண்டு பிரதட்சணம் செய்யகூடாது. 

பங்குனி உத்திரம் சிவனுக்கு மிகவும் சிறந்த தினமாகும். 

சிவபெருமானுக்குரிய திருப்பணிகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் குற்றமற்ற நல்ல அறமே ஆகும்.