ஏழரை சனி யாருக்கு தொடங்குகிறது, யாருக்கு முடிகிறது? ஒவ்வொரு ராசிக்கு என்ன சனி நடக்கிறது?
சனிப்பெயர்ச்சி 2020 -2023 : கிரக பெயர்ச்சிகளில் மக்களால் அதிகம் கவனிக்கப்படுவது சனிப் பெயர்ச்சி. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய சனி பகவான், இந்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சார்வரி வருடம் மார்கழி 12 (2020 டிசம்பர் 27) அன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகரத்தில் உள்ள 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் ஒவ்வொரு ராசிகளும் எந்த வகையில் ஆதாயம் அல்லது பாதிப்பை சந்திக்க உள்ளது. யாருக்கு என்ன சனி நடக்க உள்ளது என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.
சனிப்பெயர்ச்சி 2020 -2023 : கிரக பெயர்ச்சிகளில் மக்களால் அதிகம் கவனிக்கப்படுவது சனிப் பெயர்ச்சி. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய சனி பகவான், இந்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சார்வரி வருடம் மார்கழி 12 (2020 டிசம்பர் 27) அன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகரத்தில் உள்ள 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் ஒவ்வொரு ராசிகளும் எந்த வகையில் ஆதாயம் அல்லது பாதிப்பை சந்திக்க உள்ளது. யாருக்கு என்ன சனி நடக்க உள்ளது என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.
எந்த ராசிக்கு என்ன சனி ஆரம்பம்?
மேஷம் (கர்ம சனி) - ராசிக்கு 10ம் இடமான ஜீவன, கர்ம, தொழில் ஸ்தானத்தில் அமர்கிறார். சனியின் அதிர்ஷ்ட பலன் அதிகமாகவும், பாதிப்பு குறைவாக பெறப்போகும் ராசி.
ரிஷப ராசி (பாக்கிய சனி) - ராசிக்கு 9ம் இடமாக அமைவதால் அஷ்டம சனி முடிவடைகிறது. இதனால் குருவாலும், சனி பகவானாலும் யோக பலன்களைப் பெறப் போகின்றார்.
மேஷ ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 ;கர்ம சனி எப்படிப்பட்ட பலன் தரும்?
மிதுன ராசி (அஷ்டம சனி) - ராசிக்கு 8ம் இடத்தில் சனி அமர்வதால் எல்லா விதத்திலும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கடக ராசி (கண்ட சனி) - ராசிக்கு 7 இடமான மனைவி, துணை, தொழில் கூட்டாளி ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் சனியின் பாதிப்பு சற்று கூடுதலாக இருக்கும். இருப்பினும் கடமையை சரியாக, நேர்மையாக செய்பவர்களுக்கு நன்மை தான் நடக்கும்.
ஒவ்வொரு ராசிக்கும் என்ன சனி?
சிம்ம ராசி (ரோக சனி) - ராசிக்கு 6ம் இடத்தில் சனி அமர்வதால் பெரிய பாதிப்பு இருக்காது. தாக்கங்கள் குறைவாக இருக்கும்.
கன்னி (பஞ்சம சனி) - ராசிக்கு 5ம் இடத்தில் சனியின் சஞ்சரிக்கப்போவதால் அர்த்தாஷ்டம சனி முடிவடைகிறது. இதனால் சகல விதத்திலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்
துலாம் (அர்த்தாஷ்டம சனி) - ராசிக்கு 4ம் இடத்தில் அமர்ந்து அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது என்பதால் தொழிலில் அலைச்சல் ஏற்படும். சோம்பேறித்தனம் ஏற்படும். பணியிடத்தில் கவனம் தேவை.
விருச்சி ராசி (ஏழரை சனி முடிவு) - ராசிக்கு 3ம் இடத்திற்கு சனி நகர்வதால் விருச்சிக ராசி ஏழரை சனியிலிருந்து விடுபடுகிறது. எந்த முயற்சிக்கும் சிறப்பான கூடுதல் பலன் கிடைக்கும் என்பதால் முயற்சி செய்வதை இன்றே தொடங்குங்கள்.
ஏழரை சனி யாருக்கு?
தனுசு ராசி (பாத சனி, வாக்கு சனி) - ராசிக்கு 2ம் இடத்தில் சனி அமர்ந்து ஏழரை சனியின் இரண்டாம் பகுதியை அனுபவிப்பதால் உங்கள் முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பாராத திருமணம் யோகம் உண்டு.
மகர ராசி (ஜென்ம சனி)- ராசியில் சனியின் சஞ்சாரம் செய்வதால் ஏழரை சனியின் உச்சத்தில் இருக்கிறீர்கள். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் மந்தமாக இருக்கும்.
Also Read: சனிப்பெயர்ச்சியை எளிமையாக புரிந்து கொள்வது எப்படி?: அஷ்டமத்து சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன? பரிகாரங்கள் இதோ
கும்பம் (விரய சனி) - ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் இருப்பதால் விரய சனி ஆகும். அடுத்தவரைக் கண்காணிக்காமல் உங்கள் செயலில் நேர்த்தியாக செயல்பட தொடங்குங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீன ராசி (லாப சனி) - ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால் கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. தொழிலில், வியாபாரத்தில் முன்னேற்றம். லாபம் உண்டாகும்.
அதிக நல்ல பலனை அனுபவிக்க உள்ள ராசிகள் யார்?
சனி பகவான் ஒரு ராசியிலிருந்து 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் சிறப்பான பலன்களை தருவார்.
அந்த வகையில் மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீன ராசி ஆகிய ராசிகள், அவர்களின் ஜனன கால ஜாதகத்தில் தசை, புத்தி சிறப்பாக இருப்பின் அவர்கள் மிக சிறப்பான யோக பலன்களைப் பெறுவார்கள்.
சனி பெயர்ச்சி 2020 - 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் - உங்கள் ராசி இருக்கிறதா தெரிந்து கொள்ளுங்கள்!
பலன்களை அனுபவிக்க போகும் ராசிக்காரர் யார்?
சனி பகவானின் பார்வை 3, 7, 10ஆம் இடங்களில் விழுகிறது. சனி பகவான் 3ஆம் பார்வையாக மீன ராசியையும், 7ஆம் பார்வையாக கடக ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையால் பார்த்து பலன் தர உள்ளார்.
இதன் மூலம் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்கு மிகச்சிறந்த படிப்பினை கொடுக்க உள்ளார்.
ஏழரை சனியின் விடுபடும் விருச்சிக ராசிக்கு எப்படி பலன் இருக்கும்?
கடந்த ஏழரை வருடங்களாக ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்த விருச்சிக ராசி பல இன்னல்களை அனுபவித்து வந்தீர்கள். இனி உங்களின் கஷ்ட காலம் தீரப்போகிறது.
குடும்பத்திலும், தொழில், வியாபாரம், கல்வி என அனைத்து வகையிலும் ஏதேனும் ஒரு தடை, முன்னேற்றமின்மை போன்ற பிரச்னைகள் இருந்திருக்கும். பல காலமாக உங்களிடம் பனம் வாங்கி திருப்பி தராமல் ஏமாற்றியவர்கள், திருப்பி தருவர். மன கலக்கம் நீங்கி ஆறுதலும், நிம்மதியும் அடைவீர்கள்.
விரிவான பலன்கள்: விருச்சிகம் சனிப் பெயர்ச்சி பலன்கள் - ஏழரை சனியிருந்து விடுபடும் யோகக்காரர்கள்
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான் ஏழரை சனி காலத்தில் நீங்கள் பெற்ற கடினமான அனுபவத்தை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, குடும்பம், தொழில் என வாழ்க்கை முன்னேறுவதற்கான முயற்சிகளை முழுமூச்சுடன் எடுங்கள். உங்களின் முயற்சிக்கு 100% பலன் கிடைக்க உள்ள காலம் என்பதால், முயற்சி செய்வதை விட்டு விடாதீர்கள்.
குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சியும், தொழில் வளர்ச்சி, புதிய வேலை வாய்ப்பு நீங்கள் விரும்பியது போல கிடைக்கும்.
தனுசு ராசிக்கு பாத சனி பலன் எப்படி இருக்கும்?
பாத சனி பலன் எப்படி இருக்கும்?
தனுசு ராசிக்கு ஜென்ம சனி விலகி பாத சனி ஆரம்பிக்கிறது. அடுத்த 2 1/2 ஆண்டுகள் தனுசு ராசிக்கு நடக்க உள்ள பாத சனியில், கஷ்டம் பழகி விடும் என்பார்களே அந்த நிலை இருக்கும். பல தடைகள், சோதனைகள் மூலம் அனுபவத்தைப் பெறுவீர்கள்.
என்ன தான் பிரச்னைகள் வாழ்வில் குறிக்கிட்டாலும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளும் கிடைக்கும். இருண்ட வாழ்வில் கலங்கரை விளக்கம் போன்ற வெளிச்சம் மூத்தோர்களாலும், சில ஆலோசகர்களாலும் கிடைக்கும்.
விரிவான பலன்கள்: தனுசு ராசிக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள் : ஜென்ம சனி விலகி நன்மை ஏற்படுமா?
பாத சனி என்பதால் கால்களில் அடிபட வாய்ப்புள்ளது என்பதால், பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு அவசியம்.
மகர ராசிக்கு ஜென்ம சனி என்ன பலன் தரும் ?
ஜென்ம சனி என்ன பலன் தரும் ?
மகர ராசிக்கு இந்த முறை ஜென்ம சனி நடக்க உள்ளது. அதீத கவனம் தேவைப்படும் காலம் இது. 30 வயதுக்குள் உள்ளவர்களுக்கு மங்கு சனியும், 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு பொங்கு சனி நடக்க உள்ளது.
உங்கள் செயலில் சில தடைகள் வரக்கூடும். இருப்பினும் பொறுமையுடன், நம் சிந்தனையை ஒருமனதாக்கி செயல்படுவது அவசியம். சிலருக்கு மன அழுத்தமும், நிம்மதி இன்மையும் ஏற்படலாம்.
விரிவான பலன்கள்: மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் : ஜென்ம சனி எப்படி இருக்கும் தெரியுமா?
இருப்பினும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் தென்படும். நாம் சரியான வாய்ப்புகளைப் பிடித்து முன்னேறுவது அவசியம். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
கும்ப ராசிக்கு விரய சனி பலன் எப்படி இருக்கும்?
விரய சனி பலன் எப்படி இருக்கும்? கும்ப ராசி
கும்பம் (விரய சனி) - ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் இருப்பதால் விரய சனி ஆகும். அடுத்தவரை கண்காணிக்காமல் உங்கள் செயலில் நேர்த்தியாக செயல்பட தொடங்குங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விரய சனி நடப்பதால், சிலருக்கு தேவையற்ற விரய செலவுகளும், சிலருக்கு சுப செலவுகளும் நடக்கக்கூடும். எதுவாக இருந்தாலும் பண விஷயத்திலும், பரிமாற்றத்திலும் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம்.
விரிவான பலன்கள்: கும்ப ராசிக்கு ஏழரை சனி தொடக்கம் : எப்படிப்பட்ட பலன்கள் இருக்கும் தெரியுமா?
பண வரவு சிறப்பாக இருக்கும் என்றாலும், அதை சேமிக்க நம் முயற்சி தேவை. தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்பில் கவனம் தேவை.
30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இது பொங்கு சனியை அனுபவிப்பீர்கள். சொத்துக்கள் சேரும்.