Thursday 18 February 2021

*விரும்பிய மணாளன் அமைய.. செவ்வாய்க்கிழமை.. இவ்விரதத்தை கடைபிடியுங்கள்..!!*

 ஹரி ஓம் நம சிவாயா🔱🤘

 *விரும்பிய மணாளன் அமைய.. செவ்வாய்க்கிழமை.. இவ்விரதத்தை கடைபிடியுங்கள்..!!* 

 *மாசி செவ்வாயில் ஒளவையார் விரதம்..!!* 

 மாசி என்றாலே மாசி மாத செவ்வாய்க்கிழமை ரொம்பவே விசேஷம் என்பார்கள். இம்மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஒளவையார் விரதம் இருப்பது சிறப்பானது.




 *ஒளவையார் விரதம் 😘 

 சுமங்கலி பெண்களும், திருமணமாகாத பெண்களும் ஒன்று சேர்ந்து கடைபிடிக்கும் விரதம் ஒளவையார் விரதமாகும். இவ்விரதம் ஆடி, தை மற்றும் மாசி மாத செவ்வாய்க்கிழமைகளில் கடைபிடிக்கப்படுகிறது.

 இவ்விரதம் அசந்தா ஆடியிலும், தப்புனா தையிலும், மறந்தா மாசியிலும் என்ற சொல்லாடலுடன் குறிப்பிடப்படுகிறது. அதாவது, தை மாதம் கடைபிடிக்க வேண்டிய இந்த விரதத்தை மறந்துவிட்டால் மாசி மாதத்திலும், மாசியிலும் மறந்து அசந்துவிட்டால் ஆடியிலும் கடைபிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

 *ஒளவையார் விரதமுறை 😘 

 பெண்கள் ஆடி, தை, மாசி மாத செவ்வாய்க்கிழமையில் ஒளவையார் விரதம் இருப்பார்கள். இவ்விரதத்தின்போது இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒரு வீட்டில் ஒன்று கூடுவார்கள். மூத்த சுமங்கலிகள் வழிகாட்டுதலின்படி, இளம் பெண்கள் ஒளவையார் விரதத்தை தொடங்குவார்கள்.

 இவ்விரதத்தின் நிவேதனமாக பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொலுக்கட்டை தயாரிப்பார்கள். வழிபாட்டில் பயன்படுத்தப்படும் கொழுக்கட்டையை ஒளவையார் கொழுக்கட்டை எனச் சொல்வார்கள். அன்றைய தினம் செய்யும் நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.

 ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். அதன்பின் ஒளவையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை கேட்பார்கள். இறுதியாக பெண்களே விரத நிவேதனங்கள் அனைத்தையும் உண்பார்கள்.

 இவ்விரதத்தில் ஆண்களை கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை.

 *ஒளவையார் விரத பலன்கள் 😘 

 இந்த விரதம் அனுஷ்டிப்பதால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல மாப்பிள்ளை அமையும்.

 திருமணமாகி குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை வரமும் கிடைக்கும்.

 குடும்ப நலம் மேம்படும் என்பது நம்பிக்கை.

🤘🐚ஹரி ஓம் நம சிவாயா