*சங்கடஹர சதுர்த்தியில்... ஆனைமுகனை வணங்குவோம்!*
இருளில் இருந்துதான் ஒளி துவங்கும். இரவில் இருந்துதான் விடியல் புலரும்.
துன்பத்தில் இருந்துதான் இன்பம் பிறக்கும். சங்கடங்களில் இருந்துதான் சந்தோஷம் பிறக்கும்.
வெறும் சந்தோஷம்... அதிகத் தித்திப்பு. வெல்லக் கரைசல். சங்கடங்களும் கவலைகளும் நம்மைப் புடம் போடும். தங்கமாக்கும். அயர்ச்சிகளும் அல்லல்களும் பட்டை தீட்டும்.
நம்மை வைரமாக்கும். சங்கடங்களையெல்லாம் சங்கரன் மைந்தனிடம் இறக்கிவைத்துவிட வேண்டும்.
அதுதான் சங்கடஹர சதுர்த்தி.
அதற்காகத்தான், நமக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார் தும்பிக்கை நாயகன்.
பதறித் துடிக்கிற விஷயங்களை, பகைவர் பட்டியலை, பார்வதிமைந்தனிடம் இந்த நாளில், ஒப்படைத்துவிடுங்கள்.
வினைகளையெல்லாம் விக்னேஸ்வரன் பார்த்துக் கொள்வான்.
அருகம்புல் மாலையை, மாலையில் ஆனைமுகனுக்கு சார்த்துங்கள். ஆல் போல் தழைத்து, அருகு போல் செழிப்பாய் வாழ்வீர்கள்.
சுண்டலோ கொழுக்கட்டையோ முடிந்தால் நைவேத்தியம் செய்யுங்கள்.
பூரண வாழ்வைத் தந்தருள்வார் சிவமைந்தன்.
சங்கடஹர சதுர்த்தி எனும் அற்புதமான நாளில், சங்கரனின் மைந்தனை கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
சங்கடம் தீரும். சந்தோஷம் பெருகும். காரியம் யாவிலும் துணை நின்று காத்தருள்வான் கணபதி!
Related Articles
Sankatahara Chathurthi Viratham Benefits
Sankashti Chaturthi
How To perform Sankatahara Chathurthi