Wednesday, 5 October 2016

திருமணநாள் நிச்சயிக்கும் முறை

திருமணநாள் நிச்சயிக்கும் முறை


🌟 திருமண வைபோகம் மிக முக்கியமான சுப காரியமாகும். திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். எனவே நல்லதொரு திருமண நாளை நிச்சயித்து கொள்ளுதல் நலமாகும். திருமண நாளை எப்படி நிச்சயிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுவோம்.

🌟 திருமணம் மல மாதத்தில் இடம் பெறக்கூடாது, மல மாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி ஒரு மாதத்தில் இடம் பெரும் மாதம் ஆகும்.

🌟 சுக்கில பட்சம் தவிர கிருஷ்ண பட்ச காலங்களில் திருமணம் செய்யக் கூடாது. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப கிழமைகளில் மட்டும் திருமணம் செய்யலாம். மற்ற கிழமைகள் அவ்வளவு உகந்தது அல்ல.

🌟 ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் தான் திருமணம் நடத்த வேண்டும். இதர லக்னங்களில் நடத்தக் கூடாது.

🌟 திருமணம் துவதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளில் நடைபெறக் கூடாது.

🌟 திருமணம் ரோகிணி, மிருகசீரிஷம், மகம், உத்திரம், உத்திராடம், அஸ்தம், உத்திரட்டாதி, சுவாதி, அனுஷம், மூலம், ரேவதி ஆகிய சுப நட்சத்திரங்கள் தவிர இதர நட்சத்திரங்களில் நடத்தக் கூடாது.

🌟 திருமணம் அக்னி நட்சத்திரம், மிருத்யு பஞ்சகம், கசர யோகங்கள் போன்ற அசுப காலங்களில் நடைபெறக் கூடாது.

🌟 திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்னதிற்கும், மணமக்கள் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெறக் கூடாது.

🌟 மணமக்கள் பிறந்த தேதி அல்லது கிழமைகளில் திருமணம் நடைபெறக் கூடாது.