சனி பகவான்
பெயர் - சனி பகவான், சனீஸ்வரன், முடவன், மந்தன்
தந்தை - சூரிய பகவான்
தாயார் - உஷா, சாயாதேவி
மனைவிகள் - நீலாதேவி,
சேஸ்டா தேவி புத்திரர் - குளிகன் அல்லது மாத்தி
நண்பர்கள் - புதன், சுக்கிரன்
சின்னம் - தராசு
மொழி - அந்நிய பாஷை
ஆசனம் - வில்வ வடிவம்
பாலினம் - அலி
சாஸ்திர பெயர் - மேற்கோள்
கோத்திரம் - காசியபர்
வடிவம் - குள்ளம்
நாடி - வாத நாடி
உடல்உறுப்பு - நரம்பு (தொடை)
உணவு - எள்ளு சாதம்
உடமை - ஆயுளுக்கு முழுப் பொறுப்பு
ரத்தினம் - கருநீலம், நீலம் பஞ்சபூதத்
தன்மை - ஆகாயம்
குணம் - குரூரர்
நன்மை அடையும் இடம் - 3, 6, 11 தசை
வருடம் - 19 வருடம் பலன் கொடுக்கும்
பார்வை - 3, 7, 10
ராசி சஞ்சாரம் - 2 வருடம்
பிணி - வாதம், நரம்பு நோய்
பகைவர்கள் - செவ்வாய், சூரியன், சந்திரன்
கிழமை - சனிக்கிழமை
பூஜிக்கும் தேவதை - துர்க்கா, சாஸ்த்தா
பெற்ற பட்டம் - ஈஸ்வர பட்டம்
பரிகார தலங்கள் - 1. திருநள்ளாறு, 2. குச்சனூர், 3. திருக்கொள்ளிக்காடு
திசை - மேற்கு
அதிதேவதை - எமன்
தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
இனம் - சூத்திரர்
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை மற்றும் வன்னி
ஆடை - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலமணி
சுவை - கசப்பு
சமித்து - வன்னி
உலோகம் - இரும்பு
பயன் - நோய்,
வறுமை, சிரமங்கள், நீங்குதல்
தீபம் - எள்ளு தீபம் ஆட்சி
வீடு - மகரம், கும்பம்
உச்ச வீடு - துலாம்
நீச்ச வீடு - மேஷம்
நட்பு வீடு - ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
சம வீடு - விருச்சிகம்
பகை வீடுகள் - கடகம், சிம்மம்
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை
ஜோதிட விதிப்படி ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கின்றாரோ அதையே அவரின் ஜென்ம ராசியாக கணக்கில் கொள்கிறோம். ஜென்ம ராசியை வைத்து பலன் கூறுவதே கோட்சாரப் பலன் ஆகும். கோட்சார ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராயும்போது ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமாக சனிபகவானே இருக்கிறார்.
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம். சனி பகவான் 12 ராசியை சுற்றிவர 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதனால்தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை. 30 வருடங்கள் தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி உள்ளது. பொதுவாக ஒருவருக்கு சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் கூறுவர்.
குறிப்பாக சனிபகவான் 3, 6, 11-ல் சஞ்சரிக்கும் காலங்களில் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் தொழில் வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமை வல்லமை. உடல்நிலையில் ஆரோக்கியம் போன்ற அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும்.
ஆனால், சனி பகவான் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது அதிகப்படியான சோதனைகளை உண்டாக்குவார். குறிப்பாக 12, 1, 2-ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள். ஜென்மராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் 1-ல் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்ம சனி என்றும் 2ல் சஞ்சரிக்கும் காலத்தை குடும்ப சனி, பாத சனி என்றும் கூறுவார்கள்.
இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்புகள் குடும்பத்தில் பிரச்சினைகள், நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடுகள், தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள், உத்தியோகத்தில் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளைக் கொடுக்கும். தேவையற்ற விரயங்கள் உண்டாகும். சனி 4-ல் சஞ்சரிக்கும் காலங்களை அர்த்தாஷ்டம சனி என்கிறோம்.
இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். சனி 7-ல் சஞ்சரிப்பதை கண்ட கனி என்கிறோம். இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்பு, கணவன்-மனைவி யிடையே கருத்து வேறுபாடு, நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடு, கூட்டுத் தொழிலில் வீண் பிரச்சினைகள், விரயங்கள் உண்டாகும். சனி 8-ல் சஞ்சரிக்கும்போது, அஷ்டம சனி உண்டாகிறது.
இக்காலங்களில் அதிகப்படியான சோதனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். உடல்நிலையில் பாதிப்பு, நெருங்கியவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். குறிப்பாக சனிபகவான் சாதகமற்று சஞ்சரிக்கும்போது சிலருக்கு அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சனி ஜெனன காலத்தில் நீசம் பெற்றிருந்தாலும் அஷ்டம சனி, ஏழரை சனி காலங்களில் பிறந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
தொழில் ஸ்தானமான 10-ல் சனி சஞ்சரிப்பதும் நல்லதல்ல. சனி சாதகமற்ற பலன்களை ஏற்படுத்தும் என்றாலும் ஜெனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய மகரம், கும்பம், துலாகத்தில் அமைந்திருந்தாலும் சனியின் நட்சத்திரங்களாகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சனியால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படாது.
பாதச்சனி
கோசார ரீதியில் சனிபகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் காலம் பாதச்சனி ஆகும். இதனால் குடும்ப சூழ்நிலையிலும் தன வருவாயிலும் சில சிக்கல்கள் நேரலாம். இதற்கு சனிக்கிழமையில் எள் முடிச்சிட்டு தீபம் ஏற்றி, சனிபகவானை வழிபட்டு எள் அன்னம், நைவேத்தியம் செய்து ஆராதித்து, அதனை ஏழைகளுக்கு வழங்கி, அப்படிப் பெறுகின்ற ஏழைகளுக்கு சில்லரைகளையும் தான தர்மங்களையும் செய்யலாம்.
வீட்டிலும் தினசரி சமைத்த உணவை உண்ணுவதற்கு முன்பு காக்கைக்கு வைத்து அது உண்ட பின்பு உண்பது நலம். ஒரு தேங்காயை பசுவாக ஆவாகனித்து ஆத்ம சுத்தியுடன் ஏழைகளுக்கு தானமாக வழங்கினால் போதும். வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம் போன்றவற்றை நடத்தினால் நல்லது.
மங்கு சனி, பொங்கு சனி
சனி சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கிரகம் ஆகும். சூரியக் குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும். வளி அரக்கக் கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும். சனிக்கோள் ஐதர்சன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒரு சில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது.
இது பாறை மற்றும் கனிக்கட்டியிலான சிறிய உள்ளகமும் அதைச் சுற்றி தடிமனான உலோக (மாலை) ஐதரசன் அடுக்கும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கி.மீ. மணி வரையிலும் இருக்கக் கூடும்.
சனிக்கிகோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனிகிரகத்தில் மொத்தம் 61 நிலவுகள் உள்ளன. இதைத் தவிர சுமார் 200 நிலவுக்குட்டிகள் சனிக்கு உள்ளன. கிரக வளையங்கள் கொண்ட சனி சூரிய குடும்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கிரகமாக விளங்குகிறது.
இவ்வளையங்கள் சனியின் பூமத்திய ரேகைக்கு மேல் சுமார் 6630 கி.மீ. லிருந்து 120700 கி.மீ.வரை நீண்டிருக்கிறது. சனி கிரகத்துக்கு சனைச்சரன் என்றும் மந்தன் என்றும் சனை என்றால் மெள்ள அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் சனி எடுத்துக் கொள்கிறார்.
விண் வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் இவர் வெகு தொலைவில் இருப்பவர், சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம் அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின. ராசி மண்டலத்தை ஒரு முறை வலம் வருவதற்கு, சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை.
அதாவது ஒருவருது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் 30 வருடத்துக்குள் ஒரு முறை 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கும் சனி, அடுத்ததை பொங்கும் சனி, மூன்றாவதை போக்கு சனி என்பார்கள்.
இப்படி முன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், முதல் பிரிவு கவுமாரம் எனப்படும். அதாவது, அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். அடுத்து, யௌவனம். அதாவது இளமைப் பருவம் எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு அலசி ஆராயும் திறனுடன், நல்லது, கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் அது.
துன்பங்களைத் தாங்கி, அதனை அலட்சியப்படுத்தி, மனோபலமும், சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது. மூன்றாவது, முதுமை தேக ஆரோக்கியமும் மனோபாலமும் குறைகிற இறுதிப் பகுதி. சிறு வயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில் சகல விஷயங்களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும் போது, சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும்.
மனதில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே, சனியின் பாதிப்பு மங்கியது என்பர். இளமையில் வளர்ச்சியுற்று எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து சனி பகவானின் தாக்கம் கட்டுகடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்க செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர்.
இன்ப- தன்பம் நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கிறார் சனி பகவான். இளமையில் கற்ற கல்வியுடன் விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின் தாக்கத்தை, திருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும்.
ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர். முதுமையில் சோர்வைச் சந்தித்த உடலும் உள்ளமும் கொண்டிருக்க, சனியின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக் கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன் செயல்பாடு உதவும், ஆகவே, அவனது வேலையைச் சுட்டிக்காட்டி, போக்கு சனி என்றனர்.
ஆக, முதல் பகுதி வளரும் பருவம், 2-ம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, இன்பத்தை அனுபவிக்கிற பருவம் இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம். இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, சனி பகவானின் செயல்பாடு இருப்பதை ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.