பெண்களின் ஜாதகத்தில் 8ம் பாவகத்திற்கு முக்கியத்துவம் தருவது ஏன்?
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது பெண்களின் ஜாதகத்தில், லக்னத்தில் இருந்து 8-ம் பாவகமான ஆயுள் ஸ்தான அமைப்பிற்கு ஜோதிடர்கள் முக்கியத்துவம் கொடுத்து பொருத்தம் பார்ப்பார்கள்.
பெண்ணின் ஜாதகத்தில் 8ம் பாவகத்தின் வலிமையை வைத்து, ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து (7க்கு 2ம் வீடான 8ம் பாவகத்தை) குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை, ஜாதகியின் ஜாதக அமைப்பில் இருந்து துல்லியமாக அறிந்துகொள்ள இயலும் என்பதால் பெண்ணின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்திற்கு முக்கியத்துவம் தந்து பலன் காண்கின்றனர்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருந்தால் ஜாதகி தனது திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சிறப்பான குடும்ப வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும்.
தனது கணவன் அமைப்பில் இருந்து முழு ஆதரவும், அவரின் இனிமையான பேச்சும் ஜாதகிக்கு மன மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் வாரி வழங்கும். தனது கணவனுக்கு அதிகப்படியான வருமான வாய்ப்பையும், திடீர் அதிர்ஷ்ட யோகங்களையும் ஜாதகியின் 8ம் பாவகம் வாரி வழங்கும்.
8-ம் பாவகம் வலிமை பெற்ற ஜாதகியை திருமணம் செய்தால் ஜாதகியின் கணவர் சிறந்த யோக வாழ்க்கையை பெறுவார். சில ஆண்கள் திருமணத்திற்கு பிறகு அபரிவிதமான வளர்ச்சியை பெறுவதற்கு அவர்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் திடீர் அதிர்ஷ்டத்தை தரும் 8ம் பாவகம் வலிமை பெற்று அமைவதே காரணம் ஆகும்.
சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் வீடு வலிமை பெறுவது திருமணத்திற்கு பிறகு தம்பதியர் வாழும் யோக வாழ்க்கையை குறிப்பிடும். சிலரது ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை பெற்று அமையும் பொழுது காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
திருமணத்திற்கு பிறகு தோல்வியை சந்திப்பதற்கு அவர்களது ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் வலிமை பெறாத அமைப்பே காரணம். மேலும் பல தம்பதியர் விவாகரத்து பெறுவதற்கும் இந்த ஆயுள் பாவகமே காரணமாக அமைந்து விடுகிறது.
எனவே, திருமணம் செய்யும் முன்பு வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் எப்படிப்பட்ட நிலையில் உள்ளது, தனது ஜாதகத்தில் ஆயுள் பாவகம் எப்படிப்பட்ட நிலையில் உள்ளது என்பதை சிறந்த ஜோதிடரை கொண்டு தௌpவு பெற்ற பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்.