Friday, 27 October 2017

ஆள்காட்டி விரலில் மோதிரம் அணியலாமா? - ஜோதிடர் பதில்கள் ! ஜோதிடர் பதில்கள் !

ஆள்காட்டி விரலில் மோதிரம் அணியலாமா? - ஜோதிடர் பதில்கள் !
ஜோதிடர் பதில்கள் !


1. துளசி மாடம் எங்கு வைப்பது?

✴ துளசி மாடம் வடகிழக்கு மூலையில் இருப்பது சிறப்பு.

✴ துளசி மாடத்திற்கு தினமும் மாலையில் விளக்கு ஏற்றுவது சிறப்பு.

✴ துளசி மாடத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் விளக்கு ஏற்றுவது இலட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.

2. இருக்கும் வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட முயற்சி எடுக்கலாமா?

✴ பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட முயற்சி செய்யலாம்.

✴ செவ்வாய் கிழமைகளில் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்ட முயற்சி செய்வது நல்ல பலனை அளிக்கும்.

✴ மற்ற நாட்கள் மத்திமமான பலனை கொடுக்கும். வெள்ளி, சனிக்கிழமைகளில் இடிப்பது காரிய தடங்கலை ஏற்படுத்தும்.

✴ மகர ராசிக்காரர்களுக்கு தை மாதம் முதல் ஏழரை சனி ஆரம்பிப்பதால் விரயங்கள் ஏற்படும். அந்த விரயத்தை மனை கட்டுவதன் மூலம் சுப விரயமாக மாற்றிக் கொள்ளலாம்.

3. தொட்டில் கட்ட சிறந்த நாள் எது?


✴ தொட்டில் கட்டுவதற்கு முன் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும்.

✴ குழந்தை பிறந்த 11 அல்லது 16 நாள் தொட்டில் கட்டலாம்.

✴ தொட்டில் கட்டும் நாளில் அமாவாசை, கரிநாள், தனியநாள், அஷ்டமி மற்றும் நவமியை தவிர்ப்பது நல்லது.

4. ஆள்காட்டி விரலில் மோதிரம் அணியலாமா?


✴ ஆள்காட்டி விரலில் மோதிரம் அணியலாம்.

✴ குருவிற்கு தொடர்புடைய நவரத்தின கல் கொண்ட மோதிரம் அணிவது சிறந்த பலனை தரும்.

5. ஒவ்வொரு ராசிக்கும் எந்த கலர் கல் என தெரியப்படுத்தவும்?

✴ ராசியை பொறுத்து கற்களை அணியக் கூடாது.

✴ இலக்னத்தை பொறுத்தே கற்களை அணிய வேண்டும்.

✴ கற்களை அணியும் விதத்தில் கவனம் தேவை.