Friday, 27 October 2017

பிரதோஷ விரதம் இருப்பது எப்படி? - ஜோதிடர் பதில்கள் ! ஜோதிடர் பதில்கள் !

பிரதோஷ விரதம் இருப்பது எப்படி? - ஜோதிடர் பதில்கள் !
ஜோதிடர் பதில்கள் !



1. பிரதோஷ விரதம் இருப்பது எப்படி ?

🌼 பிரதோஷ விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் காலை கடன்களை முடித்துவிட்டு, சிவபெருமானை நினைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.

🌼 உடல் நிலைக்கு தகுந்தாற்போல் விரதத்தை மேற்கொள்ளவும். முடியாதவர்கள் பால் மற்றும் பழத்தில் சிறிதளவு மட்டும் உண்ணலாம்.

🌼 பிரதோஷ நேரம் எனப்படும் மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் சிவாலயங்களில் நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

🌼 பூஜையின் முடிவில் கொடுக்கப்படும் பிரசாதத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். மேலும், வீட்டிற்கு வந்து புதிய உணவை தயாரித்து, இறைவனுக்கு படைத்து பின், உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்யவும்.

2. மாடு வாங்குவதற்கு இராசி மற்றும் நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டுமா ?

🌼 கால்நடைகள் என்பது இலாபம் தரக்கூடிய தொழில் சார்ந்த உயிரினம் ஆகும்.

🌼 தொழில் ஆரம்பிக்க இராசி மற்றும் நட்சத்திரத்தைப் பார்ப்பது போல கால்நடைகள் வாங்கும் போதும் இராசி மற்றும் நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டும்.

3. என் மகன் ஆடி மாதத்தில் பிறந்தான். அதனால் ஏதும் பாதகம் உண்டா ?


🌼 ஆடி மாதத்தில் எந்த உயிரினம் பிறந்தாலும் அதற்கு பாதகம் இல்லை.

🌼 ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அதிகமாக பேசும் குணம் கொண்டவர்கள்.

🌼 குருமார்களிடம் அதிக அன்பு கொண்டவர்கள்.

🌼 உடலில் அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை உடையவர்கள்.

4. ஆடிப்
பூரம் பற்றி விளக்கம் வேண்டும் ?

🌼 ஆண்டாள் அவதரித்த திருநாளே ஆடிப்பூரம் ஆகும்.

🌼 இந்நாளில் அம்பிகைக்கு சீமந்தம் நடைபெற்றதாக கருதப்படுகிறது.

🌼 சில இடங்களில் இந்நாள் பார்வதிதேவி பூப்பெய்திய நாளாகவும் கருதப்படுகிறது.

🌼 அம்பிகையின் திருமண நாளாக பல கோவில்களில் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

🌼 பொதுவாக ஆடிப்பு+ரம் அம்பிகையின் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.

5. தந்தை இறந்த பிறகு குலதெய்வ கோவிலுக்கு எப்போது செல்லலாம்?

🌼 தந்தை இறந்த பிறகு ஆண் வாரிசுகள், ஒரு வருடம் கழித்தே குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும்.

🌼 திருமணம் ஆகாத பெண் வாரிசுகள், ஒரு வருடம் கழித்தே குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

🌼 திருமணம் ஆன பெண்கள் ஒரு மாதம் கழித்து குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஏனெனில், திருமணம் ஆன பெண்களுக்கு மாமனாரே தந்தை ஆவார்.