Friday, 27 October 2017

தினம் ஒரு திருத்தலம் - எழுத்தறிநாதர் திருக்கோவில் !

தினம் ஒரு திருத்தலம் - எழுத்தறிநாதர் திருக்கோவில் !
அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோவில் !


மூலவர் : எழுத்தறிநாதர்

தல விருட்சம் : செண்பகமரம் மற்றும் பலாமரம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது

ஊர் : இன்னம்பூர்

மாவட்டம் : தஞ்சாவூர்

தல வரலாறு :


💥 அக்காலத்தில் சோழ மன்னனின் கணக்கரான சுதன்மன் ஒருமுறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாக காட்டும்படி கடுமையாக உத்தரவிட்டார். சரியான கணக்கு காட்டியும், தன்மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவபெருமானை வேண்டினார்.

💥 உடனே சிவபெருமான் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே, ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்? என மன்னன் கேட்டார். அதற்கு சுதன்மன் தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், சிவபெருமானுக்கு கோவிலும் எழுப்பினார்.

💥 ஆகையால் அக்கோவிலுக்கு எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அட்சரம் என்றால் எழுத்து. இது சுயம்புலிங்கம் என்பதால் தான் தோன்றீயீசர் என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்கு இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது.

💥 அம்பாள் கொந்தார் குழலம்மை என்னும் சுகந்த குந்தலாம்பாளுக்கு தனி சன்னதியும், நித்திய கல்யாணி அம்மனுக்கு தனி சன்னதியும் மொத்தம் இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன. சு+ரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். அவனுக்கு இனன் என்றும் பெயர் உண்டு. இறைவனை சு+ரியன் நம்பி வழிபட்டதால் இனன் நம்பு ஊர் என்று பெயர் ஏற்பட்டு இன்னம்பூர் என்று மாறிவிட்டது.

தலப் பெருமை :

💥 இக்கோவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விஞ்ஞானத்தின் அடிப்படையில் லிங்கம் மீது சூரிய ஒளி ஆவணி 31, புரட்டாசி 1 மற்றும் 2, பங்குனி 13, 14, 15 தேதி காலையில் விழுகிறது. இதனை சூரிய பூஜையாக கருதுகிறார்கள்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :

💥 குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் இங்கு வந்து அர்ச்சனை செய்தால் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். மேலும் குழந்தை பாக்கியத்துக்காக சுவாமிக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறினால் சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்வார்கள். அம்பாளுக்கு திருமாங்கல்ய பூஜையும் செய்வார்கள்.

திருவிழா :

💥 நவராத்திரி பூஜை பத்து நாட்கள் நடைபெறும் மற்றும் சித்திரையில் கோடாபிஷேகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருவாதிரை, சிவராத்திரி ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும்.

திறக்கும் நேரம் :

💥 காலை 7 மணி முதல் நற்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

முகவரி :

அருள்மிகு எழுத்தறிநாதர் கோவில்,
இன்னம்பு+ர் - 612 303.
தஞ்சாவூர் மாவட்டம்.
போன் : +91 435 2000157, 96558 64958.

கோவிலிற்கு செல்ல வேண்டிய வழி :

💥 கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் ரோட்டில் புளியஞ்சேரிக்கு வடக்கே 2 கி.மீ. தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.