Saturday, 28 October 2017

ஐப்பசி மாதத்தில் இனிவரும் விசேஷங்கள் என்னென்ன?

ஐப்பசி மாதத்தில் இனிவரும் விசேஷங்கள் என்னென்ன?
ஐப்பசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?

⭐ ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பௌர்ணமியில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம், தீபாவளிப் பண்டிகை, கேதாரகௌரி விரதம், கந்தசஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பல்வேறு சிறப்புகள் நிறைந்துள்ளது.

ஐப்பசி பௌர்ணமி :

⭐ சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவ லிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த எம்பெருமான் சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

⭐ எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

⭐ சிறப்புவாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபு+ரண அருளைப் பெற்று நமது குறைகளை நீக்கி பேறு அடையலாம்.

ஐப்பசி சதயம் :

⭐ ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மா மன்னர் ராஜராஜசோழன். அவரை சிறப்பிக்கும் வகையில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

⭐ இந்த வருடம் நவம்பர் 15-ல் ஐப்பசி சதயம் வருகிறது.

வளர்பிறை ஏகாதசி :

⭐ ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 'பாபாங்குசா" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி ஐப்பசி 14ம் தேதி வருகிறது.

⭐ இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், பசிப்பிணி நீங்கும், பாவ விமோச்சனம் பெறலாம்.

தேய்பிறை ஏகாதசி :

⭐ ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி 'இந்திரா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி இந்த வருடம் ஐப்பசி 28ம் தேதி வருகிறது.

⭐ இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நமது பாவம் மட்டுமன்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும். நரகத்தில் வாடும் முன்னோர்கள் வைகுண்டம் நோக்கி செல்வார்கள்.

கடைமுகம் :

⭐ ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் இந்த வருடம் நவம்பர் 16ம் தேதி வருகிறது.

⭐ ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்பர்.

⭐ ஐப்பசி மாதம் கடைசி நாள் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை நிச்சயம். இதனைக் கடைமுகம் என்கின்றனர். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.