Saturday, 28 October 2017

உங்க மோதிர விரல் உங்களை பற்றி என்ன சொல்கிறது ?? மோதிர விரல் (சூரிய விரல்) !

உங்க மோதிர விரல் உங்களை பற்றி என்ன சொல்கிறது ??
மோதிர விரல் (சூரிய விரல்) !


 ஒருவருடைய விரல்களின் அமைப்பில் இருந்து சில முக்கியமான குணங்களை சொல்லிவிட முடியும். முதல் பார்வையிலேயே விரல்கள் நீளமா, குள்ளமா என்று சொல்லி விட முடியும். உள்ளங்கை அளவிற்கு இவை ஏற்ற மாதிரி இருப்பதே சிறப்பாகும். உங்களுடைய மோதிர விரலின் அமைப்பும்... உங்களுடைய குணமும்....!

👉 கையில் உள்ள நான்காவது விரல், மோதிர விரல் என்று அழைக்கப்படுகிறது.சூரிய மேட்டிற்கு மேல் அமையப் பெற்றமையால் இதற்கு சூரிய விரல் என்று கூறப்படுகிறது.

👉 பொதுவாக மோதிர விரல் என்பது ஆள்காட்டி விரலுக்கு சமமாக இருக்க வேண்டும். அதே சமயம் பாம்பு விரலுக்கு சற்று குறைவாக இருக்க வேண்டும்.

👉 மோதிர விரலும், ஆள்காட்டி விரலும் சமமாக இருக்கும் அமைப்பு உடையவர்கள் புகழ், பொருள் ஆகியவற்றுக்கு ஆசைப்படுவார்கள்.

👉 மோதிர விரலின் நுனி கூர்மையாக இருந்தால், பெரும்பாலும் அசட்டுத்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

👉 நுனி அகலமாக இருந்தால் கலை ஆர்வம் மிக்கவர்களாகவும், நடிப்பு கலையில் வல்லவர்களாகவும் இருப்பார்கள்.

👉 மோதிர விரல் குட்டையாக இருந்தால் எல்லா விஷயங்களையும் முன்நின்று நடத்துவார்கள். ஆனால் இவர்கள் மற்றவர்களால் ஏமாற்றப்படுவார்கள்.

👉 மோதிர விரல், பாம்பு விரலுக்கு சமமாக இருந்தால் தைரியசாலிகள். ஆனால் தைரியம் பல பிரச்சனைகளையும் உருவாக்கும். எதற்கும் கவலைப்படாமல் தன்னுடைய மனதில் தோன்றுவதை செய்வார்கள்.

👉 இந்த விரல் ஆள்காட்டி விரலுக்கு மேல் நீளமாக இருந்தால் புகழ்மிக்கவர்கள். மிகவும் நல்லவர்கள் மற்றும் மிகுந்த புத்திசாலித்தனம் உடையவர்கள்.