திருநள்ளாறு உருவானதற்கு இப்படி ஒரு கதை இருக்கா? தெரியாம போச்சே!
திருநள்ளாறு பற்றி அறிவோம்....!!
திருநள்ளாறு என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது சனி பகவான் தான். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்று கூறுவார்கள். சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு. இந்த கோவில் சுமார் 1900 வருடம் பழமை வாய்ந்தது.
திருநள்ளாறு என்பதை திரு + நள + ஆறு என்று பிரிக்கலாம். இதில் 'நள" எனும் சொல் நளச் சக்ரவர்த்தியை குறிக்கிறது. அவர் இக்கோவிலில் வந்து வழிபட்டு, சனி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. காரைக்காலில் இருந்து சாலை வழியாக எளிதில் திருநள்ளாறை அடைய முடியும். திருச்சி, திருவாரூர் வழியாகவும் காரைக்கால் வந்து, பிறகு திருநள்ளாறை அடையலாம்.
மூன்று வருடத்திற்கு ஒரு முறை தன் இருப்பிடத்தை (ராசி) மாற்றி கொள்பவர் சனி பகவான். சனி பகவான் வீற்றிருக்கும் இடத்தைப் பொறுத்து தான் பல்வேறு ராசிக்காரர்களின் இன்ப துன்ப நிலைகள் கணிக்கப்படுகிறது. அப்படி சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவதை சனிப்பெயர்ச்சி என்று கூறுவர். அந்தப் புண்ணிய தினத்தில், பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருநள்ளாறு வந்து பக்தியோடு வழிபட்டுச் செல்கின்றனர்.
நளச் சக்ரவர்த்தியின் துயரை ஆற்றிய ஊர் என்பதால் தான் திருநள்ளாறு என பெயர் பெற்றது. நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. இக்கோவிலில் உள்ள இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், இறைவி பிராணேஸ்வரி. இவர் சுயம்பு மூர்த்தியாக அவதரித்தவர். தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார்.
பச்சைப் படிகம் எனும் கீர்த்தனை திருநள்ளாறில் இயற்றப்பட்டதால், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இவ்வூருக்கு முக்கிய பங்கு உண்டு. திருநள்ளாறு சென்று வழிபடும் அனைவருக்கும், நல்ல பலன்களை அள்ளித் தருவார் சனி பகவான்.
திருநள்ளாறு வரலாறு :
சைவ சமய பாரம்பரியம் கொண்ட இவ்வு+ர் மக்கள், ஜெயினர்களின் வருகையால் அவர்களின் சமயத்தால் ஈர்க்கப்பட்டனர். ஆனால் அந்த நகரத்தை ஆண்ட ராஜாவுக்கு இத்தகைய மாற்றத்தை விரும்பாமல் அதற்கு மாறாக, அந்த நகரத்தின் பாரம்பரிய சமயமான, சைவ சமயத்தை நிறுவ விருப்பம் கொண்டிருந்தார்.
அப்போது, சைவத் துறவியான திருஞானசம்பந்தரின் சிறப்புகளைப் பற்றி அறிந்த அரசர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரசரின் அழைப்பை ஏற்று அரசனைக் காண திருஞானசம்பந்தர் வந்தார்.
அங்கு வந்த திருஞானசம்பந்தர் அரசருக்கு நீண்ட காலமாக இருந்த உடல் கஷ்டங்களை தன் விசேஷ சக்திகளை கொண்டு குணமாக்கினார். திருஞானசம்பந்தர் அரசரை குணமாக்கிய விஷயம் அந்த நகரம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.
அதுமட்டுமல்லாமல் திருஞானசம்பந்தர், மக்களின் துன்பங்களையும் நீக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திருஞான சம்பந்தரின் புகழ் நகரம் முழுவதும் பரவியது. திருஞானசம்பந்தரால் ஈர்க்கப்பட்ட, மக்கள் அனைவரும் சைவ சமயத்தைத் தழுவ ஆரம்பித்தனர். இதனைக் கண்ட ஜெயின் சமயத்தினர், சம்பந்தரை போட்டிக்கு அழைத்தனர். அதில் வெற்றி பெற்ற சம்பந்தர், அங்கு மறுபடியும் சைவ சாம்ராஜ்யத்தை நிறுவ பெரும் பணியாற்றினார். இதன் தொடர்ச்சியாக, எழுந்தது தான் திருநள்ளாறு கோவில்.
இந்த கோவில் சிவ தலமாக இருந்தாலும், சனி பகவானே மிகவும் பிரசித்தி பெற்றவராக உள்ளார். இந்த கோவிலின் முக்கிய அம்சமாக கருதப்படுவது, இந்த தலத்திற்கு வந்து வழிபட்டவர்களில், திருமால், பிரம்மா, இந்திரன், திசைப்பாலகர்கள், அகத்தியர், அர்ஜூனன், நளன் ஆகியோர்கள் ஆவார்கள். இந்த தலத்தில் இருக்கும் விநாயகபெருமான் சொர்ணவிநாயகர் என்ற நாமத்துடன் விளங்குகிறார். திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் ஈஸ்வர பட்டம் பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.