Friday, 27 October 2017

நீங்க படுத்து உறங்கும் படுக்கையின் குணம் என்னவென்று தெரியுமா?

நீங்க படுத்து உறங்கும் படுக்கையின் குணம் என்னவென்று தெரியுமா?
தூக்கம்! பாயிலா? பஞ்சு மெத்தையிலா?

 
 உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களும் அவர்களின் அன்றாட தேவைகள் மற்றும் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அவைகளில் தூக்கம் ஒன்றாகும்.

தூக்கம் :

மிருகம், பறவைகள் மற்றும் மனிதர்கள் என அனைவரும் உணவை எந்த அளவிற்கு முக்கியத்துவமாக கருதுகின்றார்களோ, அதே அளவிற்கு தினந்தோறும் தூக்கத்திற்கும் தருகின்றனர்.

தூக்கமானது மனிதனுக்கு ஏற்படும் களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடன் தனது செயல்களை செய்ய வைக்கிறது.

தொடக்கத்தில் பாறைகளிலும், மணல் மேடுகளிலும், கட்டாந்தரையிலும் படுத்து உறங்கிய மனிதன், நாளடைவில் அவன் வாழ்ந்த காலத்தின் தட்பவெப்ப தன்மையை கருத்தில் கொண்டு தனக்கென்று ஒரு படுக்கையை தயார்படுத்தினான்.

பூமியில் நிலவும் அனைத்து நிலப்பரப்பு மற்றும் பருவ காலத்திற்கும் முதன்மையாக விளங்கும் படுக்கையானது கோரைப்பாயாகும். தண்ணீர் உள்ள இடங்களில் தழைத்து வளர்ந்து அனைத்திற்கும் வளைந்து கொடுத்து முறியாமல் நீண்ட நாட்கள் உறுதியுடன் இருப்பதை கண்ட முன்னோர்கள் அதை ஆராய்ந்து படுக்கைகளை உருவாக்கினார்கள்.

தொடர்ந்து பனை ஓலைப்பாய், பிரப்பம்பாய், ஈச்சம்பாய், கம்பளி விரிப்பு, இலவம் பஞ்சுபடுக்கை ஆகியவற்றை உருவாக்கினார்கள். இந்த பாய்களையும் இலவம் பஞ்சு படுக்கை தயாரிப்புகளையும் செய்வதற்கென்றே பல குடும்பங்கள் வாழ்ந்தன.

வேலை தேடும் நண்பர்களுக்காக பிரத்யோகமாக செயல்பட்டு வரும் நமது
நித்ரா தழடிள யுppடiஉயவழைn னுழறடெழயன செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்!

படுக்கையின் குணங்கள் :



நாம் படுத்து தூங்கும் ஒவ்வொரு படுக்கைக்கும் ஒவ்வொரு குணம் உண்டு.

கோரைப்பாய் : உடல்சூடு, மந்தம், விஷசுரத்தை போக்கி, உடலுக்கு குளிர்ச்சியும் உறக்கமும் தரும்.

கம்பளி விரிப்பு : கடும் குளிருக்கு, சூட்டை தந்து குளிர் சுரத்தை போக்கும்.

பிரம்பம்பாய் : சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் ஆகியவை நீங்கி நலம் கொடுக்கும்.


ஈச்சம்பாய் : வாதநோய் குணமாகும்.

தாழம்பாய் : வாந்தி, தலை சுற்றல் என அனைத்து வகை பித்தமும் படிப்படியாக போகும்.

பனை ஓலைப்பாய் : பித்தத்தை போக்கி உடல் சூட்டை நீக்கி சுகத்தை தரும்.

தென்ன ஓலை : இதில் செய்யப்படும் கீற்றில் படுத்துறங்குவது உடலின் சூட்டை சமன்படுத்தி அறிவுத் தெளிவை தரும்.


மலர்களால் உருவாக்கப்படும் படுக்கை : பெரும்பாலும் மன்னர்கள் பயன்படுத்துவது ஆகும். இதில் தூங்குவதால் ஆண்மை அதிகரிக்கும், நன்றாக பசியெடுக்கும்.

இலவம் மரத்து பஞ்சுகளை மெத்தைகளாக உருவாக்கி அதை மரகட்டிலில் போட்டு தூங்கினால் உடலில் ரத்தம், தாது பலம் பெறும். உடலில் தோன்றும் அனைத்து நோய்களும் நீங்கும்.

ஆனால் இன்றைக்கு நவீனத்தை விரும்பி எங்கோ ஒரு நாட்டில், அந்த நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட படுக்கையை வாங்கி தூக்கத்தை தொலைத்து, நோயையும் ஏற்படுத்திக்கொள்கிறோம்.

படுக்கும் முறைகள் குறித்து சான்றோர்கள் கூறியது என்ன?

சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து மேற்கு திசையில் கால்நீட்டி படுக்க வேண்டும்.

மாமனார் வீட்டில் தூங்கும் போது தெற்கு திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்.

வெளியூரில் தங்கும் போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.

எந்த காலத்திலும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக்கூடாது.

இடது பக்கமாக சாய்ந்து இடதுகையை தலைக்கு அடியில் வைத்து கால்களை நேராக நீட்டி தூங்குவதே சிறந்த முறையாகும்.