Thursday, 12 October 2017

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் திருநள்ளாறு செல்ல வேண்டும்? திருநள்ளாறு பற்றி அறிவோம்....!!

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் திருநள்ளாறு செல்ல வேண்டும்?திருநள்ளாறு பற்றி அறிவோம்....!!







தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டு எழிலுடன் விளங்குகிறது. இத்தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தியாகராஜர் தகவிடங்கர் எனப்படுகிறார். அவர் ஆடும் நடனம் உன்மத்த நடனம் எனப்படும்.

🌿 இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் த
ர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்தாலும், இத்தலத்தின் பெருமைக்கு மூலக்காரணமாக இருப்பவர் இத்தலத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவான் ஆவார்.

🌿 சனீஸ்வரருக்கு என்று இங்கு தனி சன்னதி உள்ளதால் இந்தக் கோவிலில் நவகிரகங்கள் கிடையாது. மூலவ
ர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது.

🌿 இந்தக் கோவிலில் சனி பகவானுக்கு உகந்த காக்கை வாகனம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ காலங்களில் சனீஸ்வர பகவான் தங்கக் காக வாகனத்தில் அம
ர்ந்து வீதி உலா வருவார்.

🌿 இந்த தலத்திற்கு வந்து சனீஸ்வரரையும், த
ர்ப்பாரண்யேஸ்வரரையும் வணங்கி வழிபடுபவர்களுக்கு சனி பகவான் தரும் பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் மனத்திடமும், பிரச்சனைகளிலிருந்து மீளும் வழியும் கிட்டும். நல்வாழ்வுக்கும் வழி பிறக்கும்.

நள தீ
ர்த்தம் :

🌿 இக்கோவிலுக்கு அருகில் நள தீ
ர்த்தம் என்ற பெயரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. சனியின் ஆதிக்கத்திற்கு உள்ளான நளச் சக்கரவர்த்தி பல துன்பங்களை அனுபவித்தான். சனிபகவானின் வரத்தின்படி நள சக்கரவர்த்தி இத்தலத்திற்கு வந்து தீர்த்தத்தை உருவாக்கினார்.

🌿 இங்குள்ள தீ
ர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டதால் அவருக்கு இருந்த துன்பம் நீங்கியது. நளன் நீராடிய தீர்த்தம் என்பதால் இந்த தீர்த்தத்திற்கு நள தீர்த்தம் என்று பெயர் பெற்றது. இங்கு நள தீர்த்தம் தவிர, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் உள்ளிட்டவையும் இத்தலத்தில் உள்ளன.

🌿 சனீஸ்வரன் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெய
ர்ச்சி ஆகிறார். சனிப் பெயர்ச்சியின் போது அவர் அவர்கள் ஜாதகத்தின் தன்மைக்குத் தகுந்தவாறு நன்மை தீமைகள் நடைபெறகூடும் என்பதால் இந்நாளில் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை.

🌿 இதனால் ஒவ்வொரு சனிப் பெய
ர்ச்சியின் போதும் மக்கள் இங்கு வந்து நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபாடு செய்கின்றனர்.