Thursday, 12 October 2017

நீங்கள் பிறந்த யோகமும்! அதற்கான பலன்களும்! பிறந்த யோக பலன்கள்!

நீங்கள் பிறந்த யோகமும்! அதற்கான பலன்களும்!
பிறந்த யோக பலன்கள்!




ஒருவர் பிறந்த ஜாதகத்தை வைத்து இராசி நட்சத்திரங்கள் குறிக்கப்படுகிறது. அதேபோல் ஒருவர் பிறந்த யோகத்தை வைத்து அதற்கான பலன்களை காணலாம்.

யோகங்களும் அதற்கான பலன்களும் :

1. விஷ்கம்பம் - வெற்றியாளர், செல்வந்தர்.

2. ப்ரீதி - பெண்கள் வசமாவர்.

3. ஆயுஷ்மான் - நீண்ட ஆயுள் உடையான்.

4. சௌபாக்கியம் - மட்டற்ற மகிழ்ச்சியும், மங்கள வாழ்வும் உடையவர்கள்.

5. சோபனம் - காம இச்சையுடையவர்.

6. அதிகண்டம் - கொடிய செயல், கொலை வெறிமிக்கவர்.

7. சுகர்மம் - தனவான், நல்லவன்.

8. திருதி - கொடூர குணமுடையவன்.

9. சு+லம் - முன்கோபி, சண்டையிடும் மனோபாவம்.

10. கண்டம் - நாச வேலையில் ஈடுபடுபவன்.

11. விருத்தி - பேச்சாற்றல் மிக்கவர்.

12. துருவன் - குபேரனுக்கினையான செல்வந்தன்.

13. வியாசதம் - கொடிய செய்கையுடையான்.

14. அரிஹணம் - புத்திமான், பிரபலமானவன்.

15. வஜ்ஜிரம் - தனவான்.

16. சித்தி - பிரபுத்வம், பலரை ஆதரிப்பவன்.

17. வியாதிபாதம் - தீய எண்ணம், மோசக்காரன்.

18. வரியான் - காமாந்தகன், தீய வழியில் செல்பவன்.

19. பரீகம் - தனவந்தன், அடாவடித்தனம் நிறைந்தவன், போக்கிரி.

20. சிவம் - வேத சாஸ்திர ஈடுபாடு, தயாளகுணம்.

21. சித்தம் - யாகம், ஹோமம் நடத்துபவன். உத்தமன்.

22. சாத்யம் - நேர்மை வழியில் செல்பவன்.

23. சுபம் - தனவந்தன், சுகபோகி, அழகியவதனன்.

24. சுகபிரமம் - சொல்வீரன், நன்னடத்தை உள்ளவன்.

25. பிரம்மம் - ரகசியம் பாதுகாப்பவன், பதவி உயர்வு பெறுவதில் கவனம் உடையவர், கொடைவள்ளல்.

26. அயீந்திரம் - சகலகலா வல்லவன், தனவந்தன்.

27. வைதிருதி - தந்திரசாலி, பலசாலி, தனவந்தன், பிறரை பழிப்பவன்.