Friday, 27 October 2017

உங்க நடுவிரல் நீளமா இருக்கா? அகலமா இருக்கா? நடு விரல் (பாம்பு விரல் - சனி விரல்) !

உங்க நடுவிரல் நீளமா இருக்கா? அகலமா இருக்கா?
நடு விரல் (பாம்பு விரல் - சனி விரல்) !




👉 பாம்பு விரல் நீண்டும், அகன்றும் கனத்தும் காணப்பட்டால் இவர்கள் பேச்சாலே பிறரைக் கவரக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே சமயம் இரக்க குணமும் இருக்கும். கடுமையான முயற்சி செய்து பொருள் சம்பாதிப்பார்கள். நம்பிக்கை உள்ளவர்கள். மனமும், உடலும் உறுதி படைத்தவர்கள்.

👉 நடுவிரல் மோதிர விரலைவிட நீளமாகக் காணப்பட்டால் சரிசமமான பலன்களை அனுபவிப்பார். அவர்களுக்கு கஷ்ட நஷ்டங்களை சரிசமமாக அனுபவிப்பார்கள்.

👉 மோதிர விரலும், பாம்பு விரலும் ஒரே அளவு நீட்டமாக இருந்தால் இவர்கள் சு+தாட்டத்தில் பிரியர்களாகவும், மற்றவர்களை விட வல்லவர்களாக இருப்பார்கள்.

👉 ஆள்காட்டி விரலை விட பாம்பு விரல் குறைந்து இருந்தால் இவர்களுக்கு சித்த பிரம்மை பிடிக்கக் கூடும். இவர்கள் பிறருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதால் பல இழப்புக்கு உள்ளாக நேரிடலாம்.

👉 ஆள்காட்டி விரலும், பாம்பு விரலும் சமமாக இருந்தால் இவர்கள் பலப்பல தொல்லைகளுக்கு உள்ளாவார்கள்.

👉 பாம்பு விரலின் முனைப் பாகமானது அகலமானதாக இருந்தால் இரக்க சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். மேலும் கலையின் மேல் இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். இந்த விரலின் முனைப் பாகம் கூர்மையாக இருக்குமானால் சுயநலவாதிகளாகவும், பிறருடைய துன்ப துயரங்களுக்கு இரங்காதவர்களாகவும் இருப்பார்கள்.

👉 நடுவிரலானது எவ்விதக் கனமும் இல்லாமல் அகலமும் குறைந்து நீளமும் குறைந்து காணப்படுமானால் இவர்கள் மற்றவர்களுடைய வெறுப்புக்கு ஆளாக வேண்டி வரும். சின்ன சின்ன இன்பம் தரும் காரியங்களில் ஈடுபடுவர். மேலும் இவர்களுக்கு சுயநலம் இருக்கும், கர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள்.