Friday, 3 November 2017

நீங்கள் செய்யும் பூஜை விரைவில் கடவுளை அடைய வேண்டுமா? பூஜை செய்வதற்கான சில குறிப்புகள்!

நீங்கள் செய்யும் பூஜை விரைவில் கடவுளை அடைய வேண்டுமா?
பூஜை செய்வதற்கான சில குறிப்புகள்!



♤ பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூப தீபம் முடியும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சத்தத்தோடு செய்யப்படும் பூஜை நல்ல பலன் தரும்.

♤ கோவில்களில் அர்ச்சகரிடமிருந்து தான் பிரசாதங்களை பெற வேண்டும். நாமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

♤ பெருவிரலும், மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களை சேர்க்கக்கூடாது.

♤ திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும்போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத்தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

♤ பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், வாழை, கொய்யா, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம் ஆகியவை.

♤ செண்பக மொட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

♤ மலர்களை கிள்ளி பூஜிக்கக்கூடாது. வில்வம், துளசியை மாலையாகவே பூஜிக்க வேண்டும்.

♤ முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா ஆகிய அனைத்தும் பஞ்ச வில்வம், இவை சிவ பூஜைக்கு ஏற்றவை.

♤ துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், செங்கழு நீர், மரிக்கொழுந்து, மருதாணி, தாபம், அருகு, நாயுருவி, விஷ்ணு க்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.

♤ குடுமியுள்ள தேங்காயை சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

♤ பூஜை செய்யக்கூடாத மலர்கள் வாசனை இல்லாதது, முடி புழுவோடு சேர்ந்தது, வாடிய மலர்கள், தகாதவர்களால் தொடப்பட்டவை, நுகரப்பட்ட மலர்கள், தரையில் விழுந்த மலர்கள்.

♤ தாமரை, நீலோத்பலம் போன்ற மலர்களை பறித்த அன்றே பூஜை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

♤ ஒருமுறை இறைவன் திருவடியில் சமர்பிக்கப்பட்ட மலர்களை மீண்டும் எடுத்து பூஜிக்கலாகாது.

♤ மலர்களை முழுவதுமாக பூஜிக்க வேண்டும்.

♤ துலுக்க சாமந்தி பூவை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது.

♤ பவளமல்லி சரஸ்வதிக்கு ஆகாது.

♤ தும்பை லட்சுமிக்கு ஆகாது.

♤ அருகம்புல் அம்பிகைக்கு ஆகாது.

♤ விஷ்ணுக்கு துளசி மாலை உகந்தது.

♤ சிவனுக்கு தாழம்பூ ஆகாது.

♤ விநாயகருக்கு துளசி ஆகாது.

♤ ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்திற்கு மஹாதீபம் அல்லது மஹா நீராஜனம் என்று பெயர்.