கண் திருஷ்டிக்கான பரிகாரம் என்ன? - ஜோதிடர் பதில்கள் !
ஜோதிடர் பதில்கள் !

1. கண் திருஷ்டிக்கான பரிகாரம் என்ன?
கண் திருஷ்டி விலக ஐந்து சு+டத்தை எடுத்து நம் குலதெய்வம் மற்றும் நாம் விரும்பிய கடவுளை மனதில் நினைத்து நம் தலையை இடமும், வலமும் சுற்றி முச்சந்தியில் தூக்கிப் போட வேண்டும். இதன் மூலம் திருஷ்டி கழியும்.
கண் திருஷ்டி படங்களை வீட்டின் வாயிற்படியில் வைத்தால் கண் திருஷ்டி குறையும்.
2. சந்திராஷ்டம தினத்தன்று வெளிநாடு செல்லலாமா?
ஏற்கனவே முடிவு செய்த பயணமாக இருந்தால் சந்திராஷ்டம தினத்தன்று பயணத்தை மேற்கொள்ளலாம்.
சந்திராஷ்டமம் அன்று முடிவு செய்து, அன்றைக்கே பயணத்தை மேற்கொள்ளக்கூடாது.
சந்திராஷ்டம தினத்தன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
3. தலையில் மூன்று சுழி இருந்தால் என்ன பலன்கள்?
மூன்று சுழி இருக்கும் குழந்தைகள் சௌபாக்கியத்துடனும், அமைதியுடனும் இருப்பார்கள்.
இரண்டு சுழி இருக்கும் குழந்தைகள் குறும்புத்தனத்துடனும், சுறுசுறுப்புடனும் இருப்பார்கள்.
ஒரு சுழி இருக்கும் குழந்தைகள் அமைதியுடனும், பொறுமையுடனும் இருப்பார்கள்.
4. அம்மாவிற்கும், மகளுக்கும் ஒரே மாதிரியான ராசி, நட்சத்திரம், லக்னம் இருந்தால் நன்மையா? தீமையா?
அம்மாவிற்கும், மகளுக்கும் ஒரே மாதிரியான நட்சத்திரமும், லக்னமும் இருந்தால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.
நன்மை வந்தாலும் இரு மடங்காக வரும். தீமை வந்தாலும் இரு மடங்காக வரும்.
எனவே பிள்ளையை உறவினர்கள் வீட்டிலோ அல்லது பள்ளி மற்றும் கல்லு}ரியின் விடுதியிலோ தங்க வைத்து படிக்க வைக்கவும்.
ஏனெனில், ஒரே ராசி மற்றும் லக்னம் உள்ளவர்கள் ஒரே வீட்டில் இருப்பது நல்லதல்ல.
5. புத்திரதோஷம் நீங்க எந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்?
ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ள திருபுல்லாணி என்னும் ஸ்தலத்திற்கு சென்றால் அங்கு பால் பாயசம் தருவார்கள்.
அதை அருந்துவதால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது
ஜோதிடர் பதில்கள் !

1. கண் திருஷ்டிக்கான பரிகாரம் என்ன?
2. சந்திராஷ்டம தினத்தன்று வெளிநாடு செல்லலாமா?
3. தலையில் மூன்று சுழி இருந்தால் என்ன பலன்கள்?
4. அம்மாவிற்கும், மகளுக்கும் ஒரே மாதிரியான ராசி, நட்சத்திரம், லக்னம் இருந்தால் நன்மையா? தீமையா?
5. புத்திரதோஷம் நீங்க எந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்?