Friday, 3 November 2017

எலுமிச்சையில் விளக்கு ஏற்றலாமா? - ஜோதிடர் பதில்கள் !

எலுமிச்சையில் விளக்கு ஏற்றலாமா? - ஜோதிடர் பதில்கள் !
ஜோதிடர் பதில்கள் !
1. வீட்டில், எலுமிச்சையில் விளக்கு ஏற்றலாமா?


✳ வீட்டில், எலுமிச்சையில் விளக்கு ஏற்றக்கூடாது.

✳ எலுமிச்சை என்பது ராஜ கனி, எனவே கனியை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது சாலச் சிறந்தது.

✳ கனிகளில் தீபம் போடுவதை தவிர்க்கவும்.

✳ அகல் விளக்கு தீபமே இறைவனுக்கு சிறந்தது.

2. கழுகு தலையில் கொத்தியதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?

✳ கழுகு தலையில் கொத்தினால் பயணங்களில் கவனம் தேவை. கூட்டுத் தொழில் செய்வோராயின், கூட்டாளிகளிடம் கவனம் தேவை.

✳ தனிமையாக இருப்பதை தவிர்த்தல் நலம்.

3. ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா?


✳ ரஜ்ஜு பொருத்தம் என்பது மாங்கல்ய பொருத்தம் ஆகும்.

✳ மாங்கல்ய பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்யக் கூடாது.

✳ ஆயுள் பொருத்தம் இருவருக்கும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.

4. நாகதோஷம் உருவாக காரணம் என்ன?


✳ சர்ப்பங்களை கொன்றவர்களுக்கும், பிறரின் வருமானத்தை கெடுத்தவருக்கும், மற்றவர்களின் குடும்ப பிரச்சனைகளில் தலையிட்டு தவறான தீர்ப்புகளை சொன்னவர்களுக்கும் மற்றும் பேச்சினால் மற்றவர்களின் மனதை கஷ்டப்படுத்தியவருக்கும் நாகதோஷம் உண்டாகும்.

5. நாக தோஷத்திற்கான பரிகாரம் என்ன?

✳ சர்ப்பங்களை வழிபடவும்.

✳ சர்ப்ப சிலைகளை பிரதிஷ்டை செய்யலாம்.

✳ மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது சிறப்பு.

✳ சர்ப்பங்களுக்கு அதிபதியான விநாயகரை வழிபடுவது சிறப்பு.

6. வலது கால் சுண்டுவிரலில் பல்லி விழுந்தால் பலன் என்ன?

✳ வீடு சுத்தமாக இல்லாமல் இருப்பது பல்லியின் வரவை குறிக்கிறது. எனவே வீட்டை வருடம் ஒரு முறையாவது வெள்ளையடிக்க வேண்டும்.

✳ வலது காலின் சுண்டு விரலில் பல்லி விழுவது உடல் ஆரோக்கியமின்மையை குறிக்கிறது.

✳ வலது பாதங்களில் பல்லி விழுவது அரசுக்கு அபராதம் கட்டுவதைக் குறிக்கிறது.