Friday, 3 November 2017

கிரக தோஷத்திற்கு செய்ய வேண்டிய தானங்கள் !

கிரக தோஷத்திற்கு செய்ய வேண்டிய தானங்கள் !



⭐ கிரக தோஷங்கள் ஒருவரின் பு+ர்வ ஜென்ம வினைப்பயன்களால்தான் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் கிரக தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு எளிய பரிகாரங்களும் உள்ளன.

⭐ இங்கு கிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்த தானம் செய்தால் நன்மை என்பதை பற்றி பார்ப்போம்.

சூரியன்


⭐ மாணிக்கம், தாமிரம், சொர்ணம், கன்றுக்குட்டியும் பசுவும், கோதுமை, சிவப்பு பட்டு, சிவப்பு துணி இவைகளை தானம் செய்தால் நற்பலன் கிடைக்கும்.

சந்திரன்


⭐ வெள்ளி, முத்து, பால், வெள்ளை, சங்கு, வெண்பட்டு, வெள்ளை வஸ்திரம், பூணு}ல், வெள்ளைப்பசு, நெய், கற்பூரம் ஆகியவைகளை தானம் செய்வது நலனை தரும்.

செவ்வாய்

⭐ காளை, துவரை, தாமிரம், பவளம், கோதுமை, சிவப்பு வஸ்திரம் ஆகியவைகளை தானம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

புதன்

⭐ பட்டு ஆடை, சர்க்கரை பொங்கல், தங்க விக்ரகம், சந்தன கட்டை, பச்சை பயிறு, யானை தந்தம், நெய் போன்றவைகளை தானம் செய்வது உத்தமமாகும்.

குரு

⭐ சர்க்கரை, மஞ்சள், குதிரை, தங்க விக்ரகம், புஷ்பராகம், மஞ்சள் பட்டு வஸ்திரம், நவரத்தின மாலை, அவரை, கடலை ஆகியவைகளை தானம் செய்ய வேண்டும்.

சுக்கிரன்


⭐ வெண்பட்டு, வஜ்ரம், வெள்ளை குதிரை, வெள்ளி விக்ரகம், தாம்பூலம், அவரை, பசு ஆகியவைகளை தானம் செய்து வந்தால் நலம் தரும்.

சனி
⭐ எள், பாத்திரம், நீலக்கம்பளி, கருப்பு பட்டு வஸ்திரம், இரும்பு விக்ரகம், கரும்பசு ஆகியவைகளை தானம் செய்தல் நலம் தரும்.

ராகு

⭐ எண்ணெயுடன் பாத்திரம், கோமேதகம், எருமை, ஈய விக்ரகம், இரும்பு, பூ, குடை, உளுந்து ஆகியவைகளை தானம் செய்தல் நலம் தரும்.

கேது
⭐ வைடூரியம், விக்ரகம், வெண்கலப் பாத்திரம், பலவர்ண ஆடை, கம்பளி, கொள் ஆகியவைகளை தானம் செய்தல் நன்மை தரும்.