Friday, 3 November 2017

இந்த பழமொழியின் உண்மை விளக்கம் இதுதான் !

இந்த பழமொழியின் உண்மை விளக்கம் இதுதான் !
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ! நாம் அறிந்த விளக்கம் :


பழமொழி கொஞ்சம் வஞ்சப் புகழ்ச்சியாக பெண்கள் மீது இடப்பட்ட கருத்தாக உலக வழக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. புராணங்களில் படிக்கும் போது அசுரனுக்கு வரம் தந்து வாழ்வளிக்கும் பெண் தெய்வங்கள் பின் அந்த அசுரனையே அழிக்க நேரிட்டதால் இப்பழமொழி வந்திருக்க கூடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

விளக்கம் :
இப்பழமொழியில் இரண்டு விஷயங்கள் நளினமாய் மறைக்கப்பட்டுள்ளன. நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே என்று வந்திருக்க வேண்டும். அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த பழமொழியில் நல்லவை, தீயவை என்ற இரண்டு வார்த்தைகளும் மறக்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று வந்துவிட்டது.
போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை. வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை !
நாம் அறிந்த விளக்கம் :

நிறைய பேர் இதை அறிந்திருக்க கூடும். உண்மையான விளக்கமும் தெரிந்திருக்கலாம். அதாவது சாதாரணமாய் படிக்கையில் போக்கிடம் இல்லாதவன் அல்லது வெட்டித்தனமாய் சுற்றுபவன் காவல் துறை அதிகாரிக்கும், எந்தவித பின்புலமும், செல்வமும் இல்லாதவன் வாத்தியார் வேலைக்கும் ஏற்றவர்கள் என்று அர்த்தம் கொள்ளும்படி ஆகி விட்டது. ஆனால் இது உண்மை விளக்கம் அல்ல.

விளக்கம் :

வார்த்தைகளை சற்று பிரித்து பொருள் கொண்டோமேயானால் இந்த உட்பொருள் சொல்ல வந்த விளக்கத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம். போக்கத்தவன் ஸ்ரீ போக்கு + கற்றவன், அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்ட மனிதன் போலீஸ் வேலைக்கு தகுதியானவன். வாக்கத்தவன் ஸ்ரீ வாக்கு + கற்றவன், வாக்கு என்பது சத்தியம், அறிவு என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. மொத்தத்தில் படித்தவன், அறிவு பெற்றவன் போன்ற தகுதிகளை கொண்டவன் கற்பித்தல் பணிக்கு தகுதியானவன். இதைக் கொண்டே சொல்லப்பட்ட பழமொழி மருகி திரிந்து மேற்கண்ட முறையில் வந்துவிட்டது.