உள்ளங்கையில் உள்ள ரகசியங்கள் !
உள்ளங்கையை விரித்தவுடன் எந்த மேடு மற்ற மேடுகளை விட அதிகமாய் உயர்ந்து காணப்படுகிறது என்பதை வைத்து ஒருவருடைய குணநலன்களை தெரிந்துக் கொள்ளலாம். எந்தெந்த மேடுகள் பலமாக உள்ளன, எவை பலம் இழந்து உள்ளன என்பதை வைத்தும் ஒருவருடைய குணநலன்கள் அறிந்து கொள்ளப்படுகிறது. அதில் சுக்கிர மேடு பற்றி பார்ப்போம்.....
சுக்கிர மேடு என்பது கட்டை விரலுக்கு அடிப்பாகத்தில் காணப்படுகிறது.
சுக்கிர மேடு உப்பலாக இருந்தால் உச்சமேடு எனவும், பள்ளமாக இருந்தால் நீச்ச
மேடு எனவும், சமமாக இருந்தால் நடுத்தர மேடு எனவும் அழைக்கப்படுகிறது.
சுக்கிர மேடு உச்சமாக இருந்தால் பலன்கள் நல்லவைகளாக இருக்கும். நீச்சமாக
இருந்தால் கெட்ட பலன்களையும், சமமாக இருந்தால் நல்லவை, கெட்டவை சமமாக
நடக்கும்.
இந்த மேடு கையில் நன்றாக அமைந்து இருந்தால் நடுத்தர உயரமாக இருப்பார்கள். பிறரைக் கவரக்கூடிய தோற்றம் கொண்டவராக இருப்பார்கள்.
சுக்கிர மேடு உச்சமாக இருந்தால் அன்பு, பாசம் நிறைந்தவர்களாகவும், இரக்கம்
உடையவர்களாகவும், உயர்ந்த ரசனை உள்ளவர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும்
உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் சிக்கனம் உடையவர்கள். அதிர்ஷ்டம் நிரம்பிய மனைவி அமைவாள்.
பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் தருபவர்கள். இவர்களுக்கு பெண்களால் நன்மை ஏற்படும்.
எதிலும் புதுமையை விரும்புவார்கள். எதுவாக இருந்தாலும் முயற்சி செய்து
பார்த்து விடுவார்கள். இவர்களுக்கு இல்லை என்ற சொல் அகராதியில் இல்லை.
இவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் கோபம் வரும். இவர்கள் தவறுகளை திருத்திக் கொள்ள விரும்புபவர்கள்.
தவறு செய்து விட்டால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவார்கள். எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுவார்கள்.
மற்றவர்களை தன் கட்டுபாட்டிற்குள் வைத்து நிர்வகிக்கும் திறமை இவர்களுக்கு இருக்கும்.
ஆனால் இவர் அன்பிற்கு அடிமையானவர். இவர்களிடம் அன்பால் எதையும் சாதிக்கலாம். உதவி செய்வார்கள்.
எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாங்கி கொண்டு, அதிலிருந்து மீண்டு வந்து
வெற்றிக் கொடியை நாட்டுவார்கள். சிரிக்கும் படியும், சிந்திக்கும் படியும்
பேசுவார்கள்.
உள்ளங்கையை விரித்தவுடன் எந்த மேடு மற்ற மேடுகளை விட அதிகமாய் உயர்ந்து காணப்படுகிறது என்பதை வைத்து ஒருவருடைய குணநலன்களை தெரிந்துக் கொள்ளலாம். எந்தெந்த மேடுகள் பலமாக உள்ளன, எவை பலம் இழந்து உள்ளன என்பதை வைத்தும் ஒருவருடைய குணநலன்கள் அறிந்து கொள்ளப்படுகிறது. அதில் சுக்கிர மேடு பற்றி பார்ப்போம்.....
சுக்கிர மேடு :
குண நலன்கள் :