Friday, 5 January 2018

நாடிப் பொருத்தம்..!!

நாடிப் பொருத்தம்..!!

✳ மனிதனின் உடல்நிலை நன்றாக இருக்கிறதா என்பதை பார்க்க மருத்துவர்கள் நாடிப்பிடித்து பார்ப்பார்கள். ஆனால் கணவன் மனைவி நடத்தும் குடும்ப வாழ்க்கையில் நோய் நொடிகள் வராமல் இருப்பதற்காக பார்க்கப்படுவது நாடிப்பொருத்தம் ஆகும்.
✳ நம்முடைய உடலில் மூவகை நாடி உள்ளது. அவை வாதம், பித்தம், கபம் அல்லது சிலேத்துவம் ஆகும். இவ்வகை நாடி மூன்றும் சம அளவில் உடலில் அமைந்தால் உடல் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த மூன்று நாடிகளும் சீரான இயக்கத்தில் இருக்கும் வரை மனிதனின் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
✳ நாடிப் பொருத்தம் நன்கு அமைந்தால் பேரன், பேத்திகளையும், அவர்களின் திருமணத்தையும் கண்டுகளிக்கும் அளவிற்கு ஆயுள் நீடிக்கும்.
✳ 27 நட்சத்திரங்களையும் முறையே மூன்றாக பிரித்துள்ளனர். ஒரு நாடியை ஒன்பது நட்சத்திரங்களாக பிரித்துள்ளனர். அவை
✳ பார்சுவநாடி (அ) வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.
✳ மத்யம நாடி (அ) பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி
✳ சமான நாடி (அ) சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி
✳ பொதுவாக ஆண்- பெண் இருவரும் ஒரே நாடியாக அமைந்தால் பொருத்தம் இல்லை. அதாவது ஆண் கேட்டை, பெண் சதயம் எனில் இருவரின் நாடியும் வாத நாடியாக வருகிறது. இவ்வாறு இருவரும் ஒரே நாடியாக வரக்கூடாது. இருவரும் ஒரே நாடியாக இருந்தால் கணவன், மனைவி இருவரும் நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.
✳ ஆண், பெண் நட்சத்திரங்கள் வெவ்வேறு நாடியாக அமைந்தால் பொருத்தம் உண்டு உத்தமம். ரச்சு, வேதை, தினம் ஆகிய மூன்று பொருத்தங்களும் இருந்தால் நாடிப் பொருத்தம் அவசியம் இல்லை.
✳ ஆண், பெண் இருவருக்கும் சமான நாடியாக (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.