Friday, 5 January 2018

சனிப்பெயர்ச்சியால் அரசாங்க வேலை யாருக்கு அமையும்?

சனிப்பெயர்ச்சியால் அரசாங்க வேலை யாருக்கு அமையும்?
சனிப்பெயர்ச்சியால் அரசாங்க வேலை யாருக்கு?
 
நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக கருதப்படுவது சனிகிரகம் ஆகும். சனி கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது.

கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தார். ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள்காரகன் என்ற அதி முக்கியமான பதவியை வகிக்கின்றார். இவர் சூரிய பகவானின் இரண்டாவது புதல்வர் ஆவார்.

ஒரு கிரகம் ஒரு இராசியிலிருந்து மற்றொரு இராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்கிறோம். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு இராசியிலிருந்து மற்றொரு இராசிக்கு இடம் பெயர்கின்றது. அதன்படி சனிபகவான் ஒரு இராசியில் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்வார். எனவே சனிபகவானின் பெயர்ச்சி காலம் இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 4ஆம் தேதி (19.12.17) செவ்வாய்க்கிழமையன்று விருச்சக இராசியிலிருந்து தனுசு இராசிக்கு சஞ்சாரம் செய்யதார். சனிபகவானின் இந்த பெயர்ச்சியினால் எந்த இராசிக்கு எந்த விதமான தாக்கங்களை தரப்போகிறார் என்று பார்ப்போம். 

அரசு வேலை தரும் ஜாதக அமைப்பு:

ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நு}ல்கள் கூறுகின்றன.

மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனீஸ்வரன் அரசாங்க உத்யோககாரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துறை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். 

ராஜ கிரகங்களான சூரியன் சந்திரன் மற்றும் அரசாங்க அதிகார பதவிகளை தரும் செவ்வாய் ஆட்சி உச்ச பலம் பெற்று நிற்க வேண்டும். மேலும் 6,8,12 மற்றும் பாதகாதிபதி தொடர்புகள் பெறாமல் இருக்கவேண்டும். அனைத்து பதவிகளையும் தீர்மானிக்கும் சனீஸ்வரபகவான் ஆட்சி உச்சம் பெற்று சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

சந்திரனும், குருவும் பரிவர்த்தனை யோகம் அல்லது குரு சந்திர யோகம் அல்லது கஜகேசரி யோகம் போன்ற யோகங்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட யோகங்களை பெற்று விளங்க வேண்டும். தர்ம கர்மாதிபதி யோகம் மற்றும் பஞ்ச மகா புருஷ யோகம் ஆகியவை செவ்வாய் உச்சம் பெற்றோ அல்லது 3,6,11 போன்ற இடங்களிலோ இருக்க வேண்டும். 
இந்த யோகங்கள் இருந்தால் அரசாங்க வேலை நிச்சயம்.

வழிப்பாட்டு தலம் :
சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அச்சிறுபாக்கத்தில் அருள்மிகு ஆட்சீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த திருக்கோயிலில் உள்ள சிவபெருமானை ஞாயிற்று கிழமைகளில் சென்று அபிஷேகம் செய்து வணங்கி வர அரசாங்க பதவி வேண்டுவோருக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமை திறன், பதவி உயர்வு, அரசாங்க பதவி போன்றவற்றையும் வழங்குவதில் ஆட்சீஸ்வரருக்கு நிகர் யாரும் இல்லை.