பல ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷத்தின் மகிமை !!
ஹேவிளம்பி வருடம் திங்கட்கிழமையான இன்று வரும் பிரதோஷம், பல ஆண்டுகளுக்கு
ஒரு முறை நிகழும் அபு+ர்வ பிரதோஷம் ஆகும். இந்த பிரதோஷத்தின் மகிமை
என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள், நட்சத்திரம் மற்றும் திதி ஆகியவை
ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.
பிரதோஷ நாளான இன்று (திங்கட்கிழமை), திருவாதிரை நட்சத்திரம், திரயோதசி
திதி இந்த மூன்றும் ஒன்றாக வரும் அபூர்வ நாள். இந்த அபு+ர்வ நாளில் நாம்
பிரதோஷ வழிபாடு செய்தால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை நேரத்தில் சிவனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.
பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும்,
தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில்
விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து,
சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ
ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம்.
இந்த பிரதோஷத்தை மேற்கொண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு
குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில்
திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும், தொழில் மேன்மை
அடையும், கடன் பிரச்சனை தீரும். போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில்
வெற்றி கிடைக்கும்.
அபூர்வ பிரதோஷமான இன்று சந்தனம், பால், இளநீர் கொண்டு சிவனுக்கும்,
நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து வழிபாடு செய்தால் நாம்
தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் மற்றும் ஜாதகத்தில்
உள்ள சந்திர தோஷம், ராகு - கேது போன்ற நவகிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்
என்பது நம்பிக்கையாகும்.
Related Articles:)
Hindu Festivals 2018
How to observe Pradosh Vrat?
Pradosham or Pradosh Vrat
Pradosham Dedicated to Shiva - Significance of Pradosh Vrat
பிரதோஷ பலன்கள் :
Related Articles:)
Hindu Festivals 2018
How to observe Pradosh Vrat?
Pradosham or Pradosh Vrat
Pradosham Dedicated to Shiva - Significance of Pradosh Vrat