கோவில்களுக்கு சென்று வழிபடும்போது விக்ரகத்தை தொட்டு வழிபடலாமா?
1. 2ல் கேது, 8ல் ராகு மற்றும் மற்ற அனைத்து கிரகங்களும் இதற்கு உள்ளே இருந்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

2ல் கேது, 8ல் ராகு உடையவர்கள் தங்கள் பேச்சுகளால் தங்கள் மரியாதையை தாங்களே கெடுத்துக் கொள்வார்கள்.

உடல் பலவீனம் உடையவர்கள்.

வாக்கு பலிதம் உண்டாகும்.

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.
2. மாடு முட்ட வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

மாடு முட்ட வருவது போல் கனவு காண்பது வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்காது என்பதைக் குறிக்கிறது.

ஆகவே, வாகனப் பயணங்களில் மிகுந்த கவனம் தேவை.
3. லக்னாதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி ஆறில் அஸ்தமனமாகி இருந்தால் என்ன ஆகும்?

நோய்களினால் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும்.

எதிரிகளால் ஆபத்து உண்டாகும்.

முன்னேற்றம் இல்லாத வாழ்க்கை அமையும்.

புத்திரர்களால் மன வருத்தம் உண்டாகும்.

கீர்த்திக்கு பங்கம் ஏற்படுதல் போன்றவை நிகழும்.
4. கோவில்களுக்கு சென்று வழிபடும்போது விக்ரகத்தை தொட்டு வழிபடலாமா?

கோவில்களுக்கு சென்று வழிபடும்போது விக்ரகத்தை தொட்டு வழிபடுதல் கூடாது.

கோவிலில் உள்ள விக்ரகங்களில் இறைவன் தியான நிலையில் இருப்பார். எனவே,
இறைவனின் தியான நிலையை கெடுக்காதவாறு அவரை தொடாமல் வணங்க வேண்டும்.

மேலும், கோவிலில் உள்ள பு+சாரிகள் ஆச்சாரத்துடன் இறைவனை தொட்டு
வணங்குவார்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடுதல் இருக்கும்.
5. 7ல் கேதுவுடன் சனி சேர்ந்தால் என்ன பலன்?

குறைவாக பேசக்கூடியவர்கள்.

தாமதமான திருமண வாழ்க்கை உண்டாகும்.

உழைப்புக்கு ஏற்ற வருவாய் இல்லாத நிலை ஏற்படும்.

தனிமையை விரும்புபவர்கள்.

மனைவியை தவிர பிற பெண்களை நாடுபவர்கள்.

கூட்டுத் தொழிலால் முன்னேற்றம் உண்டாகும்.